உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம் -34 ஓ

ல்லை; உறங்கவில்லை! உங்கள் பாடத்தை முழுதுறக் கேட்டு உள்வாங்கிக் கொள்வதற்காகக் கண்களை மூடினேன். கண்திறந்திருந்தால் பக்கம் பார்க்கவும் கவனம் தவறவும் ஆகலாம். அதனால்தான் என்றார் ஆனந்தர். ஆசிரியர் நம்பவில்லை.

ஆனந்தர், ஆசிரியர் கற்பித்த பாடம் முழுவதையும் அப்படியே ஒப்பித்தார், வியந்தார் ஆசிரியர்.

இக்கேள்வியே ஒருமையொடு கேட்ட கேள்வியாம்.

ஆனந்தர் ஒருமுகப்படுத்தல் பற்றி உரையாற்றினார் அமெரிக்காவில். அவர் நிலையை ஆய விரும்பினோர், மேடைக்குக் கீழே வெடி வைத்தனர். வெடியொலி கேட்டுக் கூட்டம் வெளியேறியது. விவேகானந்தரோ எந்தவோர் அதிர்வும் இலாராய்த் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்! ஒரு முகப் பட்டார்க்கு அவருள்ளேயே உலகம் ஒடுங்கிப் போகின்றது! உலகியல் நிகழ்வு அவ்வேளையில் அவர்களை அசைப்பதும் இல்லை! அலைப்பதும் இல்லை!

நிலையில் திரியாது அடங்கிய மலையின் நிலை அது. விவேகானந்தர் நாள் ஒன்றுக்குப் பல்லாயிரம் பக்கம் படித்து அக்கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலராகத் திகழ்ந்தார் என்பது வரலாறு.

கவனகம் :

எண்கவனகம், பதின்கவனகம், பதினாறு கவனகம், முப்பத்திரண்டு கவனகம், நூறு கவனகம் வல்லார் உளர். அவர் நிலை என்ன எனின், அவ்வக் கவனகத்தின் போது அதுவாகவே இருந்து உள்வாங்கி ஒழுங்குறப் பதிவாக்கி வைத்துக் கொண்டு வைத்தது மாறாமல் மீள எடுத்து வழங்குகிறார். முன்னாளில் வாழ்ந்தவர் செய்கு தம்பிப் பாவலர்; நூற்றுக்கவனகர்; இரு நூற்றுக் கவனகமும் ஒரு முறை செய்தார். ஆயிரக்கணக்காகக் கொண்டுள்ள நூலகத்தில் பணி செய்வார், தாம் விரும்பும் நூலை கைவைத்த இடத்தில் கண்டு எடுக்கிறாரா இல்லையா? ஆயிரக்கணக்காக அடுக்கி வைக்கப்பட்ட மருந்துகளை, எளிமையாய் நொடிப்போதில் எடுத்துத் தருகின்றனரே! இவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்ன? ஒருமுகப் பட்ட பார்வையின் வெற்றியே அஃதாம்.