உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமுகம் :

வள்ளலார் கண்ட சாகாக்கலை

175

ஒருமை,எழுமை என்னும் சொற்களைக் கண்டதும், உரைகாண்பார்க்குத் தோன்றுவது ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்னும் பழக்கப்பட்டுப் போன செய்தியே முன்வந்து விடுகின்றதாம். ஆனால், ஒருமை மகள் என்பதில் எழுமைச் சொல் இல்லை. அதனால், ஒருமை என்பதற்குக் கவர்த்தல் இல்லாத அல்லது ஒருமுகப்பட்ட என்னும் பொருள் காண நேர்ந்துவிடுகின்றது. பரிமேலழகரே அப்பொருளைத் தந்து விடுகிறார்.

ஒருமைப்பாடு என்பது பலரும் பொருள் அறிந்தோ அறியாமலோ சொல்லவும் கேட்கவும் ஆகிய சொல்லாகி விட்டது. தம் எண்ணப்படியே செயல்படும் ஒருவரை ஒரு மனசு என்று ஊரவர் வழங்குவதையும், சொல்லிய விலையை அன்றி மாற்றாத ஒருவர் கடையை, ஒரு சொல் கடை என்பதையும் யான் அறிவேன். இவ்வாறு பிறரும் அறிந்திருக்கக் கூடும்.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து”

என்னும் குறளுக்கு, ஒருப்பட்ட உள்ளத்தோடு ஒருவன் கற்ற கல்வி அவனுக்குப் பின் வரும் வாழ்நாள்களில் எல்லாம் அழியாத பாதுகாப்பாக இருத்தலை யுடையது எனப் பொருள் கொள்ள வாய்க்கின்றது.

ஒருமை :

66

வள்ளலார் பாடிய கந்த கோட்டப் பாடலில்,

"ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்

உறவு கல வாமை வேண்டும்.

""

என்று (முதல் பதிகத்திலேயே) ஒருமையைச் சுட்டுதல் எண்ணத் தக்கது.

“ஒருமைப் பயனை, ஒருமை நெறி

உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வை"

என இறைமைப் பேற்றை உரைப்பதும் எண்ணுக (2792).

"ஒருமையின் உலகெலாம் ஓங்குக”

என்னும் திருப்பள்ளி எழுச்சி (4890) நினைக.