உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

நாடோறும் வழுவாமல் கற்பிக்கலானார். ஆனால், இராமலிங்கமோ சொல்லி வைத்த பாடங்களைக் கண்ணும் கருத்துமாகக் கற்பதில்லை. எந்நேரமும் ஏதோ வேறொரு சிந்தனையில் ஆழ்ந்து, தமையனார் மொழியைச் சிறிதும் ஆக்குவதில்லை அடிகளாரைப் பற்றி மணி திருநாவுக்கரசர் எழுதுகிறார்.

என

திவாகரம், பிங்கலம், சூடாமணி முதலியவை தமிழ்ப் புலமை பெறுவார்க்குச் சொற்பொருட் களஞ்சியமாகத் திகழ்ந்தவை. அவற்றைக் கற்க வேண்டுமெனின் கற்பார், எழுத்தற வாசித்தவராக இருத்தல் வேண்டும். அத்தகவு இலாரை கற்குமாறு கற்பிப்பார் சொல்ல மாட்டார்! சொல்லியும் தாரார்! ஆதலால், வள்ளலார் நிகண்டுப் பாடம் கற்கத் தூண்டப்பட்டார் என்றால், எழுத்து சொல் தொடர் ஆயவை கற்றிருந்தார் என்பதாம். கூறப்பட்ட நிகண்டு நூல்களோ, சதகம், அந்தாதி என்பனவோ உரைநடை நூல்கள் அல்ல! பாடல் நூல்கள்! ஆதலால், பாடற் பயிற்சியும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு.

சபாபதியார் கற்பித்த நூல்களில் ஊன்றாத வள்ளலார், அவர் தாமாகத் தமக்குத் தோன்றிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு தமக்கு விருப்பமான நேரங்களில் படிப்பார். ஆனால், தம் தமையனார் கட்டளைப்படி எந்நூலையும் உருப்போட்டுப் படித்து அப்படியே ஒப்புவிக்க மாட்டார் என்கிறார் மணி திருநாவுக்கரசு.

தமக்கு விருப்பமான நூலை, தமக்கு விருப்பமான நேரங்களில் படிப்பார்! இது படிப்பு இல்லையா? முன்னரே படிக்க அறிந்திருந்தால் அன்றி,எப்படி விருப்பமான நூல்களை, விருப்பமான நேரங்களில் படிக்க முடியும்? ஒரு முறை படித்தாலே பச்சை மரத்து ஆணியினும் பதியும் திறம் வாய்க்கப் பெற்றிருந்த வள்ளலார், உருப்போட வேண்டியது என்ன? ஒப்பிக்க வேண்டியது என்ன? இராமலிங்கரை, அண்ணார் விருப்பப்படி கல்வி கற்க வேண்டுகிறார்; தூண்டுகிறார் அண்ணியார்.

அண்ணார் சொல்லுக்கு ஆட்படாத இளவல் அண்ணியார் வடித்த கண்ணீர் நனைக்க இளகித் தடையில்லாது ஏற்கிறார். தண்ணீர் ஆற்றலும் அருமையும் உலகுக்கு உணர்த்தவே பிறந்த வள்ளலார், அண்ணியாரிடமிருந்து கற்றுக் கொண்ட ஓதாமல் கற்றுக் கொண்ட முதற்பாடம் உருக்கம்! எந்தப் பள்ளிக் கல்வியாலும் உண்டாகாத இயற்கை ஆன்ம நேய உருக்கக் கல்வி

அது.

-