உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

179

"அப்படியே நான் செய்யத் தடையில்லை. நாளைக்கே மேல் மாடியில் எனக்குத் தனியே ஓர் அறையை விட்டுவிட வேண்டும். அவ்வறையை மெழுகித் தூய்மை செய்து வைத்து விடுங்கள். நான் கல்வி கற்கத் தொடங்குவேன் என்றனர் என்கிறார் மணி திருநாவுக்கரசர்.

வள்ளலார், ஓர் அறையை விட்டுவிட வேண்டும்: தூய்மை செய்து விடுங்கள் இத்தகைய கட்டளை உரையை உரைப்பார் என அவருள்ளம் அறிந்தார் ஒப்பார். ஓரறை வேண்டினார்; பெற்றார்; கற்றார் என்றே அமைவோம்.

தமிழ் :

தமிழ் மொழி அமைப்பு எத்தகையது?

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல ஒட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய் சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றிடத்தே மனம்பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர் என்பது வள்ளலார் எழுத்து. மேலும்,

தமிழ்ப் பாஷையே அதிசுலபமாகச் சுத்த சிவானு பூதியைக் கொடுக்கும் என்றும் கூறுகிறார்.

எழுத்தறியத் தீரும் இழிதகைமை என்பது தமிழ் மொழித் தகவு பற்றிய பாடல் தொடர்.

தமிழ் எழுத்துகளைக் கூட்டினால் போதும்; சொல் தானே வந்து நிற்கும்.

எதனால்?

ஓரெழுத்துக்கு ஒரே ஒலி; எழுத்து ஒலிச் சேர்க்கையே சொல்! எ.டு: அ-ம்-மா = அம்மா.அ-ப்-பா = அப்பா. சொல்லைச் சேர்த்து வரச் சொற்றொடர்தானே வரும். எ-டு: அம்மா வந்தார்.

எழுத்துத் தெளிவும், எழுத்தைக் கூட்டிப் படிக்கும் திறனும் இருந்தால் எந்த நூலையும் எளிதாகப் படிக்கலாம்; பொருள் புரியலாம்.எ.டு: