உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

66

இளங்குமரனார் தமிழ்வளம் -34

‘அகர முதல எழுத் தெல்லாம்”

“நன்றி மறப்பது நன்றன்று"

66

'வடவேங்கடம் தென்குமரி"

எழுத்து ஒலியும் இயற்கை வழியது; இயற்கை வழியதே எழுத்து வடிவம்; சொற் பொருளோ, வாய்வழிப் பயின்று வந்த தாய் மொழி! ஆதலால், இடரேதும் இன்றி எந்நூலையும் பயிலலாம். கேட்டதையும் படித்ததையும் மனத்தகத்தே பதித்துக் கொள்ளும் திறம் தனித்தனியானது. ஒருவர்க்கு ஒருமுறை போதும்; ன்னொருவர்க்கு மும்முறை வேண்டும்; மற்றொருவர்க்குப் பத்து முறையும் தேவையாகலாம்! வள்ளலார் உள்ளப் பதிவுக்கு ஒருமுறை படிப்பது போதுமாக இருந்தது. அதனால், தனித்த இடத்தில் இருந்து, படிப்பே நோக்காக ருந்து, தாமாக ஒன்றிவிட்ட இறையுணர்வோடு வள்ளலார் படித்த நூல்களுக்கு வரம்பு இல்லை.

வரம்பு இல்லை என்பது எப்படித் தெரியும்!

கையேடு :

வள்ளலார் தமையனார் சபாபதியார் புராணச் சொற் பொழிவாளர். அவைகள், செல்வர் இல்லங்கள் முதலியவற்றிற்குச் சென்று அங்குக் கூடினோர் இன்புறப் புராணப் பாடல் -கதை- விளக்கம் சொல்லும் பணி அது. அதற்குப் புராணம் சொல்பவரை அல்லாமல் கையேடு படிப்பார் ஒருவரும் உடனிருப்பார். சொற்பொழிவாளர் விளக்கம் சொல்ல வேண்டிய பாட்டை அவையோர் இனிதில் கேட்கும் வகையில் இசையோடு பாடுவர்; பிரித்து, சந்திச் சிக்கல் இல்லாமல் பொருள் கூறுவார்க்கு எளிதாம் வகையில் நிறுத்தி பாடுவார். சொற்பொழிவாளர்க்கு ஓய்வு தரும் வகையால் அப்பொழிவின் தொடர்பான பாடல் களையும் கூட்டி இசைப்பார். சொற்பொழிவாளர் வர இயலாப் பொழுதுகளில் அவரே பொழிவு செய்யவும் வல்லாராக இருப்பார். கையேடு என்பது சொற்பொழிவாளரை ஒத்த திறம் வாய்ந்தவர் படிக்கும் இயல்பினதாகும்.

சபாபதியார்க்குக் கையேடு படித்தவர் ஒரு பெண் மணியார். அவர்க்கு உடல் நலம் இல்லாமையால் புராணப் பொழிவுக்கு வரக்கூடவில்லை. பொழிவோ நிகழ வேண்டும்; பொழிவுத் துணையாம் கையேடோ வரவில்லை. இக்கட்டான நிலையில் சபாபதியார் தம் துணைவியாரிடம் தம்பி கையேடு