உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

181

படிக்க ஏற்பாடு செய்யமுடியுமா? என்றார். அண்ணியம்மையார் அவர் நிலையை உணர்ந்து தம்பியாரை அணுகி அன்போடு உதவ வேண்டினார். வள்ளலாரும் இசைந்து சென்றார்.

இராமலிங்கம் புராணம் வாசிக்கத் தொடங்கினார். எடுத்த எடுப்பே எல்லாருக்கும் இன்பத்தை ஊட்டியது. குரலின் சுவையும் கூடிக் கொண்டது. சொல்லும் வகையோ மனத்தைக் கரைக்கிறது; ஒவ்வொரு மொழியும் உள்ளத்தே பொதிந்து அன்பிலூறித் தேனில் ஊறிய பழம்போலத் தித்திக்கிறது. பாட்டைப் பிரித்துப் பிரித்து அந்நுவயித்துப் படித்தார். இடமறிந்து தொடர்களை எடுத்துக் கொடுத்தார். மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். சபாபதியார்க்கோ உவகை பொங்கி வழிந்தது என்கிறார் மணி திருநாவுக்கரசர், கையேடு படிக்கும் ஆற்றல் நூற்கல்வி வல்லார்க்கே, எந்த நூல் சொல்லப்படுகிறதோ அந்த நூல் முன்னரே படிக்கும் முறையால் படிக்கப்பட்டு, கேட்பவர் சுவைக்கும் வகையில் பிரித்துச் சொல்லமைதி கண்டு இசையோடு சொல்ல வேண்டிய கலை, அக்கலையை அவைக்குக் காட்ட, கேட்டபொழுதே வள்ளலார் தகுதியைப் பெற்றிருந்ததுடன் அந்நூல் கற்றவராகவும் இருந்தார் என்பது விளங்கும்.

சைந்தார் என்றால், அத்

இன்னும் இதற்கு மேலாம் ஒரு நிகழ்ச்சி : சொற்பொழிவு :

வள்ளலார் தமையனார் சென்னை மல்லிகேசுவரர் கோயில் முகப்பில் இருந்த சோமு செட்டியார் வீட்டில் புராணப் பொழிவு செய்து வந்தார். அப்பொழிவின் போது ஒரு நாள் அவர்க்கு உடல் நலம் இல்லாமையால் செல்ல இயலவில்லை. என் செய்வார்? தம் துணைவியார் பார்வதி (பாப்பாத்தி) அம்மையாரிடம், தம் தம்பியை ஆங்குச் சென்று கடவுள் வாழ்த்து அளவேனும் பாடி வருமாறு ஏற்பாடு செய்ய வேண்டினார். அண்ணியார் சொல்லை வழக்கம் போல ஏற்ற இராமலிங்கர் சோமர் இல்லம் சென்றார்.

இராமலிங்கம் அன்று சொல்லக் கடவதாகிய பரஞ்சோதி முனிவர் திருவாய் மலர்ந்தருளிய திருவிளையாடற் புராணத்துள் வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத்தைப் பத்திச் சுவை சொட்டச் சொட்ட யாவரும் கருவி கரணாதி சேட்டையற்று நிற்ப விடிய விடியப் பிரசங்கித்தனர். ஜனங்கள் வியப்பால் விழுங்கப்பட்டு இராமலிங்கம் சாதாரண மனிதரல்லர்; ஏதோ