உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

தென்றலின் மென்மை, வாடையில் வருத்துதல்

பனியின் நளுக்குதல் வெயிலின் வெம்மை கனியின் இனிமை காயின் புளிப்பு

இன்னவை ஓதாமல் நாம் அறிய வாய்ப்பவை

189

எறும்பின் வரிசை, சேவல் எழுச்சி, வண்டின் செலவு, பறவையின் கூடு, விலங்கின் குகை இன்னவை யெல்லாம் தம்மை ஓதாமல் ஓதுகின்றன.

தும்பியின் இசை, மயிலின் ஆட்டம், குயிலின் கூவல்,

புல்லின் செறிவு, நெல்லின்மணி

ஈர்க்கின்றன.

ன்னவை அவனை

அருவி ஒழுக்கு, ஆற்றின் ஓட்டம், முகிலின் முழக்கம், மழையின் பொழிவு, மின்னல் இடி, கடல் அலை வை எல்லாம் அவனை ஆட்கொள்கின்றன.

ஓதாமலே அவை அவனை அறிந்து கொள்ளுமாறும் எண்ணுமாறும் செய்கின்றன. உயிரொலிகளாகிய ஆ,ஈ,ஊ, ஏ, ஓ,ஐ,ஔ, என்பவை எல்லாம் அவன் செவிக்கண் பட்டு இன்பம் சேர்க்கின்றன.

இவற்றை உணர்ந்தோர்,

"இயற்கையிலே கருத்தாங்கி

இனிமையிலே வடிவெடுத்துச்

செயற்கை நடம் செய்கின்ற”

சீர்மையைப் பாராட்டினார்.

இயற்கையே அறிவாய் :

பொதுவாக அமைந்த ஓதாக்கல்வியை வள்ளலார்,

"இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்ப மாகி" - என்கிறார் (3666)

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த

"குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சவைத்தண் ணீரே

உகந்தண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே