உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம்

34ஓ

சூல் வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதி தீவிர ஜீவமுயற்சியால் படிக்கச், சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும்.

அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் நோக்கத்தால் அறியத் தொடங் கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம் என்கிறார்.

மொழிஞாயிறு பாவாணர், மொழியார்வமும் கூர்த்த மூளையும் உடைய ஒருவர் இயல்பாக ஐம்பது மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்கிறார். மலையகத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில் தமிழ்மொழியின் முன்மை தாய்மை முதலிய வற்றை நிலைநாட்டுவதற்காகத் தாம் முப்பது மொழிகளைக் கற்றதாக உரைக்கிறார். ஐம்பத்தெட்டு மொழிகளில் வேர்ச்சொல் காட்டி விளக்கம் செய்கிறார். இலங்கை ஞானப்பிரகாச அடிகளும் இத்தகு புலமையோடு திகழ்ந்தார் என்பதும் இவண் எண்ணத் தக்கவை.

இயற்கைக் கல்வி :

இனிக் கற்றார் கல்லார் என இல்லாமல் எவ்வெவர்க்கும் கிட்டும் ஓதக்கல்வி ஒன்று உண்டு. வாய் திறந்து சொல்லாமல் வையக இயற்கை வழங்கிக் கொண்டே காலம்காலமாகத் திகழ்ந்து வரும் ஓதாக்கல்வி அது. பொறி புலக் கூர்மையாளர் எவர் எனினும் விலக்கின்றிக் கற்றுக் கொள்ள வாய்த்த இயற்கைக் கல்வி.

காகா என்பது கேட்டுக் காக்கை என்றும், குர்க்குர் என்பது கேட்டுக் குரக்கு என்றும், கீர்கீர் என்பது கேட்டுக் கீரி என்றும்

குக்குக்குகு என்பது கேட்டுக் கூகை என்றும் கூறியதும்,

ஈஈஈ என்னும் ஒலி கேட்டு ஈப்பெயரிட்டதும்

சலசல என்னும் ஒலி கேட்டு சலம் என்று வழங்கியதும்

கிண்கிண் என்னும்ஒலி கேட்டுக்கிண்கிணி என்றுகூறியதும் முதலியவை ஓதாமல் வாய்த்த பெயர்களாம்.

இவ்வகையால் ஒலி வழிச் சொற்களெல்லாம்

ஓதாமல் வாய்த்தவை என்க.