உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனும் காண்போர் ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாது ஆங் காங்கு தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும் போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும்

பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப

ஆர்த்தெழும் அன்பினும் அனைத்தையும் கலந்துதம்

என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர்.

191

புல் ஆசான் ஆகிக் குறிக்கோள் வாழ்வைக் கற்பிப்பது இப்பகுதி.

வாய்க்கால் :

தமக்கூண் நல்கும் வயற்குப யோகம்

எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்

செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ! அலைகடல் மலையா மலையலை கடலாப் புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்! பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச் சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத் தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு இன்னதென் றில்லை யாவையும் ஈர்த்துத் தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள்

காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச் சாலத் தகுமிவை யெனவோர்ந் துருட்டிக் கொண்டு சென் றிட்டுமற் “றையா! அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச் சென்றபின் பெருமலைச் சிகர முதலாக் குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும் குகைமுகம் இழிந்தும் பூமியின் குடர்பல நுழைந்தும் கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும்

ஊறிடும் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்

ஆறாய் நடந்தும் மடுவாய்க் கிடந்தும்

மதகிடைச் சாடியும் வாய்க்கால் ஓடியும்

பற்பல படியான் பட்டங் கீட்டியது

அற்பமே ஆயினும் ஆதரவாய்க் கொள்;