உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம் -34

இன்னமும் ஈதோ ஏகுவன்” எனவிடை பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய் வந்திவன் அடைந்துமற் றிராப்பகல் மறந்து நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையவர் யாவர்? - வாய்க்கால் காட்டும் ஓயா உழைப்புப் பாடம் இது. நாங்கூழ்ப் புழு :

ஓ ஓ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு

ஓவாப் பாடே! உணர்வேன்! உணர்வேன்! உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும் உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ! எம்மண் ஆயினும் நன்மண் ஆக்குவை விடுத்தனை இதற்கா எடுத்தவுன் யாக்கை உழுதுழு துண்டுமண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி

வெளிக் கொணர்ந்தும் புகழ் வேண்டார் போல ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால் இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல்

எப்படி யுண்டாம்; எண்ணா துனக்கும் குறும்புசெய் எறும்பும் கோடி கோடியாய் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைகிறது)

விழுப்புகழ் வேண்டலை அறிவோம் ஏனிது? துதிக்கலம் உன்தொழில் நடத்துதி ஆ! ஆ! எங்கும் இங்ஙனே இணையிலா இன்பம் பங்கமில் அன்பும் தங்குதல் திருந்தக் காணார் பேணும் வாணாள் என்னே!

மண்புழு காட்டும் மாண்புகழ் வாழ்வு இது.

மனோன்மணீயம் - இரண்டாம் களம். இவை தம் வாயால் ஓதவா செய்தன? நேரிய நெஞ்சம் கூரிய பார்வையும் இருப்பின் இயற்கை கொள்ளை கொள்ளையாய்க் கற்பிக்கும் கல்வியைப் பெறுதல் உறுதி. இயற்கை வழியே நாம் எண்ணிப் பெறும் கல்வி ஓதாக் கல்வியாம். இக்கல்வியைப்