உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

193

பெறுதற்குக் கட்டடத்துள் கற்கும் கல்வி கட்டாயம் தேவைப் படுவது இல்லை! எத்தனை கதைகளை, நாட்டுப் பாடல்களைப் பொதுமக்கள் தாம் தாமே உண்டாக்கி உள்ளனர் அல்லவா!

ஓதாக் கல்வியாம் இயற்கைக் கல்வி கற்றோர் பண்பாடு, செயல்திறம், வழிகாட்டுதல் என்பவை தாமே ஓதும் கல்வியர்க்குக் கிட்டியன.

ஓதிய கல்வியர் தந்ததா, தாலாட்டு, ஒப்பாரி, கும்மி முதலாம் தமிழ் வளங்கள்?

பழமொழி என்ன, விடுகதை என்ன, சொலவடை என்ன ஓதாக் கல்வியர் தாமே உலகுக்கு வழங்கினர்.

நூல் குவி குவியாகக் கிடந்தென்ன?

இயற்கை கொட்டிக் கொட்டிக் கிடந்தென்ன? அவற்றைக் கண்டு கொள்ளும் கருத்து, உள்ளுறும் ஊற்றாய்ச் சுரக்க வேண்டும் அல்லவோ! வள்ளலார் அருவியாய் வெள்ளமாய்ப் பொழிந்த பாக்களின் உள்ளுறும் ஊற்றுக்கண் எது? இயற்கை! இயற்கையோடு இயைந்த இறைமை! இயற்கையிலே கருத்தாங்கி னிமையிலே வடிவெடுத்து, இயற்கை ஒலியும் இயற்கை வரியும் அமைந்த தமிழ்!

வள்ளலாரே சொல்கிறார் சான்றுக்குச் சில :

வள்ளலார் வாய்மொழி :

“ஓதாது உணர உணர்த்தி”

“கற்றதுநின் னிடத்தேபின் கேட்டது நின்னிடத்தே”

“ஓதாமல் உணர உணர்விலிருந் துணர்த்தி”

“ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே"

"ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து”

“ஓதி, ஓதாமல் உற எனக் களித்த’

""

"முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி”

“ஓதா தனைத்தும் உணர்கின்றேன்”

“ஓதாதுணர்ந்தேன் மீதானம் உற்றேன்"

“பாடிப் படிக்கின்றேன் படிப்பேன் படிப்பித்தவாறே"

66

2775

304

3053

4112

4615-23

123

4891

5004

5315

29

5318

'யான்பாட நீதிருத்த என்னதவம் செய்தேனோ' பெருவிண்ணப்பத்திலே பேசுகிறார் வள்ளலார்.