உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ்வளம் 34 ஓ

குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியில் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என்தரத்தில் பயின்று அறிதற்கு அருமை யாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்று வித்தருளினீர்" என்கிறார்.

எல்லாம் செய்யவல்ல இறை,

"இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி

"

இருப்பதை இயம்புகிறார். இயற்கை அறிவு, இறையறிவு எனத் தெளிந்து தேர்ந்த நிலை இது.

வள்ளலார் வழியே தம் வழியென வாழ்ந்து காட்டிய தமிழ்த் தென்றல் திரு.வி.க; இயற்கை வழியே பெற்ற ஓதாக்கல்வித் திறங்களை ஓதிஓதித் திளைக்கிறார்; ஓதாக் கல்வி இயற்கைக் கல்வி என்பதையும் தெள்ளத் தெளிவாய்க் காட்டுகிறார்: இயற்கைத் தெய்வம்

இயற்கை தாண்டி இலங்கிடும் தெய்வமே ஏழை யேனுனை எப்படி எண்ணுவேன்? முயற்சி செய்யினும் மூளை வெடிக்குதே

முன்ன வாஉன் முழு நிலை என்னையோ?

இயற்கை யாகி இருக்க இரங்கினை ஏழை எண்ணி எளிதில் மகிழவோ முயற்சி யின்றி முனைப்பறல் கூடுதே முன்ன வாஉன் முழுநிலை எற்றுக்கே. இயற்கை பள்ளியாய் என்றும் நிலவலை ஏழை பின்னே உணர்ந்து தெளிந்தனன்: செயற்கைப் பள்ளியில் சிந்தை இனிச்செலா செழுமை கண்டவர் தீமையில் விழுவரோ?

மண்ணில் நின்று பொறையைப் பயிலலாம் மரத்தி லேஒப் புரவைப் பயிலலாம் விண்ணை நோக்கி ஒளியைப் பயிலலாம் வேலை சென்றலைப் பாட்டைப் பயிலலாம்

1

2

NO

3

4