உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

மயிலி லேதிகழ் நாடகம் கற்கலாம் வண்டி லேநிமிர் யாழினைக் கற்கலாம்

குயிலி லேஉயர் கீதத்தைக் கற்கலாம் கோவி லூருங் குணத்தினைக் கற்கலாம்.

அன்னை காட்சியில் அன்பைப் படிக்கலாம் அணங்கின் காதலில் வாழ்க்கை தெளியலாம் கன்னி சூழலில் தெய்வம் வழுத்தலாம் காளை ஈட்டத்தில் வீரம் உணரலாம்.

மலையி லேறி மவுனம் பழகலாம் வான ஞாயிற் றொளியைப் புசிக்கலாம் கலையில் காணாக் கருத்தைத் தெளியலாம் கணக்கில் பன்மை கரைதல் அறியலாம்

வேங்கை போந்துதன் வாலைக் குழைக்குமே வேழம் ஓடி விரைந்து வருடுமே பாங்குப் பாம்பு படமெடுத் தாடுமே பறக்கும் புட்கள் பரிவுடன் சேருமே.

ஓதாக் கல்வியென் றோதிடுங் கல்வியென் நுலகம் சொல்வதன் உண்மைத் தெளிவெது ஓதாக் கல்வி இருக்கை இயற்கையே

ஓதும் கல்வி உறைவிடம் ஏட்டிலே.

ஓதாக் கல்வி பெருக இயற்கையின்

உள்ளம் தெய்வமென் றுண்மை அடையலாம்

சாகாக் கல்வியின் தன்மை உணரலாம்

சாந்த மெய்ம்மையின் சார்பு விளங்குமே.

ஏரைப் பூட்டி உழுவோர் உளத்திலும் ஏற்றம் பாடி இறைப்போர் உளத்திலும் நாறு பற்றி நடுவோர் உளத்திலும்

நல்லி யற்கை இறையருள் நண்ணுமே.

பருத்தி சேர்க்கப் பரிவோ ரிடத்திலும் பாண ராட்டை விடுவோ ரிடத்திலும் பொருத்தி நூலினை நெய்வோ ரிடத்திலும் பொன்னி யற்கை இறையருள் பொங்குமே.

195

5

6

7

8

9

10

11

12