உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் -34 ஓ

செய்வதாகக் கையொப்பமிட்டு மேற்குறித்த வண்ணம் நமக்கும் பிறர்க்கும் பயன்படும்படி வழங்குவிப்போமாக

இங்ஙனம்

சன்மார்க்க சங்கத்தார்

சிதம்பரம் இராமலிங்கம் ரூ 1.00

எனத் தொடங்கி வைக்கிறார் வள்ளலார். 49 பேர்கள் கையொப்பமும் தொகையும் அவ்வறிக்கையில் உள்ளன. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னிட்ட செய்தி இது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

அதே ஆண்டிலேயே சன்மார்க்க போதினி என்னும் கல்விச் சாலை ஏற்படுத்துதலினும் வள்ளலார் முனைந்துள்ளார்; அறிக்கை :

சன்மார்க்க போதினி

1867

"ஆபால விருத்தர் வரையில் யாவர்க்கும் பயில்விக்கும் சன்மார்க்க போதினி என்கிற சாஸ்திர பாடசாலையொன்று நியமிக்கப்படும் பார்வதிபுரம்

பிரபவ வருடம் மீ உ

தமிழ் ஆரியம் இங்கிலீஷ் சன்மார்க்க போதினி... சாலையில் உபய கலாநிதிப் பெரும்புலவர் தொ.வேலாயுத முதலியார் முதலிய அறிஞர்களால் ...

"இவ்வளவே, முன்னுள்ள ஏடு கிழிபட்டும் இடையிலும் பின்னுமுள்ளவை எழுதப்படாமலும் ஓர் அன்பர் கையெழுத்தில் இருக்கிறது". எனத் திருமுகப் பகுதியில் பால கிருட்டிணர் காட்டியுள்ளார்.

'ஆ பாலர்' எவர்? ஆடு மாடு மேய்த்துத் திரியும் சிறுவர். அவர்கள் கல்வி பயில வேண்டும்; அவர்கள் பயிலாமை அவர்கள் குற்றமன்று; அவர்களுக்குக் கல்வி தாராமையே குறை என்பதை உணர்ந்தாராய் வள்ளலார் ஏற்படுத்திய கல்வித் திட்டம்.

“தேடு கல்வியி லாததோர் ஊரைத்

தீயினுக்கு இரையாக மடுத்தல்”

தான், கலைமகள் வழிபாடு என்பார் பாரதியார்.