உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

“கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்”

199

என்பார் பாவேந்தர். அரசின் கடன் கல்வி வழங்கல் என்பதை உணர்ந்தே வள்ளுவர் இறைமாட்சியை அடுத்தே கல்வியை வைத்தமை அறிதல் வேண்டும்.

தொல் பழ நாளிலேயே இளம்பாலரும், பாலரும் கல்வி கற்றனர் என்றும், கற்பித்தவர் இருந்தனர் என்றும் சங்க நூல்களில் வரும் புலவர் பெயர்களாலேயே அறியக்கூடும்.

சான்றாக:

"இளம் பாலாசிரியர்" "பாலாசிரியர்"

என்பார். அவரினும் மேம்பட்டார் ஆசிரியர், பேராசிரியர் என்பார். ஊர் தோறும் நூல் கற்பிக்கும் கணக்காயர் இருந்தனர்; இருக்க வேண்டும் என்ற எண்ணம் சான்றோர்க்கு இருந்தமையால்,

(C

'கணக்காயர் இல்லாத ஊரும்; பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும், பாத்துண்ணும் தன்மை இல்லாதவர் அயலிருப்பும்" ஆகிய மூன்றும் பாழ் என்று பழித்தனர்.

வள்ளலார் ஆபாலர்க்கு மட்டும் கல்வி தர விழைந்தார் அல்லர். முதியோரும் கற்க வழிகண்டார். அதனால் "ஆ பால விருத்தல்" என்றார் என்க.

அந்நாளிலேயே பன்மொழி கற்பிக்கும் பார்வை வள்ளலார்க்குத் தோன்றியமையை உணர்தல் வேண்டும்.

இப்பள்ளிகள் அவரவர் வேலைக் கேடாக இல்லா வகையில் இயல வேண்டும் எனின், நடத்தலும் வேண்டும் என்பதாம்.

வை இரவுப் பள்ளி

தொழுவூர் வேலாயுத முதலியார் முதலிய அறிஞர்களால் என அறிக்கைக் குறிப்பு உள்ளமை கொண்டு கல்வி கற்பிக்க வாய்த்த அறிஞர் பலர் என்பதும் புலப்படும்.

1812 ஆம் ஆண்டிலேயே கல்விச் சங்கம் என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டு அறிஞர் பலர் கற்பித்த செய்தியும், ஆங்கு அறநெறி கற்பிக்க வேண்டித் திருக்குறளை அவ்வாண்டிலே நெல்லை அம்பல வாண கவிராயர் திருக்குறள் - நாலடியார் மூலப் பதிப்பு செய்ததும், எல்லீசு துரை திருக்குறளை ஆங்கிலத்தில் பெயர்த்து விளக்கவுரை கண்டு 1812 இல் வெளியிட்டதும்