உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

அறியும் நாம், வள்ளலார், திருக்குறள் வகுப்பு நடாத்த ஏற்பாடு செய்ததையும் எண்ணல் வேண்டும். இனி, சமரச வேத பாடசாலை என்னும் ஒரு சாலை 11.01.1872 இல் ஏற்படுத்தப்பட்டது :

திருச்சிற்றம்பலம்

"இஃது சமரச வேத பாடசாலை”

இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங் களையும் உண்மை உரைத்தல் இன்சொல்லாடல் உ உயிர்க்கு பகரித்தல் முதலிய சற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்.

இதில் வாசிக்கின்றவர்களுக்கு சிலகாலம் வாசித்து ஒருவாறு வாசிப்பில் பயிற்சி நேரிட்டால், அந்தப் பயிற்சிக்கும் அவரவர்கள் குடும்பத்திற்கும் தக்கபடி மாதந்தோறும் பொருளுதவி செய்யப்படும். காலை மாலை சுமார் ஐந்தைந்து நாழிகை வாசித்தல் வேண்டும் திருச்சிற்றம்பலம்

பிரஜோற்பத்தி.குரு.வருடம்

...நுரமதி உயக்ஷ

இவ்வறிக்கையால் ஒரு கல்வியைக் கற்பார்க்கு வேண்டத் தக்க தகுதிகள் திட்டப்படுத்தப்பட்டுள்ளன.

அகவை வரம்பு, கற்கும் பொழுது வரம்பு ஆயவும் உள. கற்றுத் தேர்ச்சி பெற்றார் குடும்பம் அவர் வருவாயைக் கொண்டே நடத்த வேண்டியதாக இருப்பின், பயிற்சிக்குத் தகவும், குடும்பத்திற்குத் தகவும் மாதந்தோறும் பொருளுதவி புரிய வேண்டும் என்பதும் இந்நாளில் கூட நடைமுறைப் படுத்த அரியதாம். உலருக்குப் புதுவதாம் கல்வித்திட்டம் அதுவும் பொதுவுடைமை அரசுதானும் அரும்பாத காலத்துத் திட்டம் என்பதை எண்ணின் பெருவியப்பாம்!

கற்பார்க்கு உதவி :

வெவ்வேறு இடங்களில் இருந்து கற்க விரும்பியோரும் வள்ளலார் துணையை நாடி வந்ததுண்டு. அவர்கள் இயலும்