உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

201

வகையால் உதவி பெற வள்ளலார் எழுதிய கடிதங்கள் சில அறிய வாய்க்கின்றன :

இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகத்தில்

(1)

சிரஞ்சீவி நமசிவாயப் பிள்ளை அவ்விடம் படிக்க வேண்டு மென்று வருகின்றான். அவனைப் படிப்பின் விஷயத்தில் மாத்திரம் அடிக்கடி விசாரிக்க வேண்டும் என எழுதுகின்றார். அவர்க்கு எழுதிய இன்னொரு திருமுகத்தில்

(2)

இந்தக் கடிதம் கொண்டு வருகிற சி.குமாரசாமி பிள்ளை படிக்க வேண்டுமென்று விரும்பியிருக்கிறபடியால், அவனுக்கு எந்த விதத்தில் படிப்பித்தால் படிப்பு வருமோ அந்த விதத்தில் படிப்பிக்க வேண்டும், சிரஞ்சீவி நமசிவாயத்துக்கம் இதுவே (31.5.1858) என எழுதுகிறார்.

இதே கடிதத்தில் இணைத்து முருகப்பிள்ளை என்பார்க்கு எழுதியதில், சிரஞ்சீவி குமாரசாமி அவ்விடம் வருகிறபடியால் அவனுக்குப் படிப்பும் முயற்சியும் ஊதியமும் உண்டாகின்ற எவ்வகை அவ்வகை ஆராய்ந்து கூட்ட வேண்டும்.

வகை

என்கிறார்.

இரத்தின முதலியார்க்குப் பின்னே எழுதிய கடிதம் ஒன்றில் (28) "படிப்பிக்கிற விஷயத்தில் அதிக அதிக்கிரம ம பிரயாசை எடுத்துக் கொள்ளப்படாது" என்கிறார்.

“சென்னை பட்டணம் பெத்து நாயக்கன் பேட்டை ஏழுகிணற்றுக் கடுத்த வீராசாமி

பிள்ளை வீதியில் இங்கிலிஷ் இஸ்கூல் மாஸ்டர்

மகா ள ள ஸ்ரீ இரத்தின முதலியார்”

என்னும் முகவரியால் அவர் இருப்பிடம், தொழில் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பிறரைப் படிக்க வைப்பதில் வள்ளலார் கொண்டிருந்த ஆர்வம் இவற்றால் நன்கு விளங்கும்.