உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

கற்பிக்கும் முறை :

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

எந்த விதத்தில் படிப்பித்தால் படிப்பு வருமோ அந்தவிதத்தில் படிப்பிக்க வேண்டும் என்னும் வள்ளலார் எழுத்து கற்பித்தல் நெறிமுறை சுட்டுவதாகும்.

வள்ளலார் நண்பராய் இருந்த சுந்தரம் பிள்ளை என்பார் ஆசிரியப் பணி புரிந்தார். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்பது கொண்ட கொள்கையராய் மாணவரை அடித்துக் கற்பிக்கின்றார் என்பதறிந்தார் வள்ளலார். அதனால் அவர்க்கொரு திருமுகம் விடுத்தார். அத்திருமுகம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாடல் ஆகும்.

படிப்பதுநன் றெனத்தெரிந்த பாங்குடையாய் மன்றுள்வெளிப் பரம னன்பே

தடிப்பதுநன் றெத்தேர்ந்த சதுருடையாய் அறநவின்ற தவத்தாய் வீணில்

துடிப்பதிலாத் தூயமனச் சுந்தரப்போர் உடையாய்என் தோழ கேள்நீ

அடிப்பதுமச் சிறுவர்களை அடிப்பது நன் றலஎன்மேல்

ஆணை! ஆணை!

தொழுவூர் வேலாயுதர் தம் புலமைப் பேறனைத்தும் விளங்க இளையர்க்கும் தொடக்கக் கல்வியர்க்கும் புரியாத அரும்பெருஞ் செய்திகளை யெல்லாம் கொண்டு திருக்குறளுக்கு உரை விரித்துச் சொல்வதை அறிந்த வள்ளலார், கற்பார் நிலையறிந்து கற்பித்தல் வேண்டும் கடப்பாட்டைக் கற்பித்ததும் நாம் எண்ணத்தக்கதாம்.

வள்ளலார் தாம் பெற்ற நலப்பேறுகள் யாவும் எவரும் பெற வேண்டும் என்னும் பெருவேட்கையர் எனினும், தாம் பெற்ற ஓதாக்கல்விப் பேற்றை உணர்ந்து அதனைப் பிறரும் பெற வேண்டும் என விரும்பினர் எனினும், அனைவர்க்கும் அந்நிலை வாயாத வாய்மையை உணர்ந்து அவரவர் நிலைக்குத் தகவும், தேவைக்குத் தகவும், பொருள்தேடு பேற்றுக்குத் தகவும் பொது நிலைக் கல்வியும், பன்மொழிக் கல்வியும் பெறுதற்கு வழிவகை செய்ய முயன்றார் என்பதும் நாம் எண்ணத்தக்க குறிப்புகளாம்.

வள்ளலார் ஓதாக்கல்வியில் ஓங்கி நின்றவர். ஆயினும், ஓதும் கல்வியை ஒதுக்கினார் அல்லர். ஓதுதற்குச் சாலை