உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

203

அமைத்தார்; ஓத விரும்பினார்க்கு உரிய வழிகாட்டி உதவினார். பிறர் அறிவுறத் தாம் ஓதி ஓதி நின்றார். ஏன்?

அவரவர்க்குத் தக, "கொள்வார் கொள்வகை அறிந்து கொடுப்பதே கல்விக் கொடை என்பதை உலகியல் பட்டறிவால் தெளிந்து கொண்ட வகையால் ஆகும்.

அவர் நிலைக்குத் தக அவர் ஒருவரைக் காணவாய்த் திருப்பின், சாலை அறிக்கைகளில் சலிப்புத் தலைகாட்டி யிராதே அவர்க்கு! பற்று, பற்றுதலில் அல்லவோ வேண்டும்!

வள்ளலாரை வாழ்ந்த நாளிலும் தமிழகம்

கண்டு கொண்டு, அவர் பிறந்ததன் பயன்பேற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை; பின்னும் பெற்றுக் கொள்ளுதல் அரிதாகவே உளது. வள்ளலார், ஏறாத மேட்டில் ஏறிநின்று மொழிந்த “சன்மார்க்கமே என்மார்க்கம்” என வாழும் கூட்டம் உருவாக வேண்டும்! உருவாக்கவும் வேண்டும்! உலகம் உய்யத்தக்க ஒரோவழி அதுவே தான்!

ஓதாக்கல்வி முடிநிலை

பன்முறை பயின்று மனத்தில் வரப்படுத்திக் கொள்ளும் கல்வி, ஓதும் கல்வி

- பொதுநிலையில் எவர்க்கும் அமைந்த கல்வி இது. ஒரு முறை கற்ற - கேட்ட - அளவால் வரப்படுத்திக் கொள்ளும் கல்வி, ஓதாக் கல்வி.

இதற்குப் பொறி புலன்களையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தும் திறம் இயல்பாக அமைந்திருத்தல் வேண்டும்.

உள்கி உள்கித் தாமே கண்டு கொள்ளும்

உள்குதல் கல்வியும் ஓதாக் கல்வியே.

இதற்கு, என்ன, ஏன்,எப்படி,எவ்வாறு முதலாய வினாக்களைத்

தாமே எழுப்பி விடை காணல் வேண்டும்!

இயற்கை இறைமை வழியாக உணரப்பெறும்

கல்வியும் ஓதாக் கல்வியே.