உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

பழ.சண்முகனார், தந்தையாம் நிலையில் 'முந்தியிருக்கச்' செய்த பெற்றியர் பேராசிரியர் ச.மெய்யப்பனார். அம் மெய்யப்பரோ, 'இவன் தந்தை எந்நோற்றான் கொல்' என்னும் சொல்லை நாளும் பொழுதும் நன்கனம் நல்கி வருபவர். மணிவாசகர் பதிப்பக வழியே மணிமணி நூல்களை வெளியிட்டுத் தமிழ்வளம் கூட்டும் தகவாளர்; அவருக்கு எழுதினேன்.

எழுதியனுப்பிய அன்றே, இயல்பாக மணிவாசகர் நூலக மதுரைக் கிளைக்குச் சென்ற யான், என் கண் முன்னர் 'வள்ளலாரும் திருவள்ளுவரும்' என்றொரு நூல் புலவர் திரு செந்துறைமுத்து அவர்களால் எழுதப்பட்டு, மணிவாசகர் பதிப்பக வெளியீடாகவே வந்திருத்தலை அறிந்தேன். உடனே "தங்கள் பதிப்பகவழி இத்தலைப்பிலேயே ஒரு நூல் வெளிப் பட்டிருப்பதைக் கண்டேன்; ஆகலின் இதன் வெளியீடு பற்றித் தாங்கள் எண்ண வேண்டா" என எழுதினேன். ஆனால், விளைவு

என்ன?

வள்ளுவரும் வள்ளலாரும்' மகிழ்ச்சியுடன் வெளியிடு கிறேன். கையெழுத்துப் படியைச் சென்னைக்கு அனுப்புங்கள்” என உடனே மறுமொழி பேராசிரியர் அவர்களிடமிருந்து வந்தது.

திட்டம்! திட்டம்! திட்டத்தின் வடிவர் மெய்யப்பர்! சுறுசுறுப்பு' என்று எழுதிக் காட்டவேண்டிய இடங்களில் 'மெய்யப்பர்'படத்தைப் போட்டுவிடலாம்! பம்பரச் சுழற்சி அவர்க்கு இயல்பாகிவிட்ட நேர்ச்சி! அச்சுழற்சி, தமிழ் வளமாகக் கொழித்தலைக் கண்டு மகிழும் நேய நெஞ்சால் நன்றியுரைத்தல் என் தலைக் கடனாம்!

தமிழ்ச் செல்வம்,

பாவாணர் ஆராய்ச்சி நூலகம், திருநகர், மதுரை-6.

தமிழ்த் தொண்டன்,

இரா. இளங்குமரன்