உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

5

அசைதானும் வள்ளுவர் வாக்கில் பொருளின்றி வருவது இல்லை எனப் பளிச்சிட்டுக் காட்டுகிறார். (எ-டு) முதற்றே.

ஓதாக் கல்வி, சாவாக் கல்வி, பேரா இயற்கை, இன்ன திருக்குறளில் உண்மையைக் கண்டு கொள்ளுமாறு தம் ஆய்வால் துலக்குகிறார்; வாழ்வால் நாட்டுகிறார்.

வள்ளுவர் வாக்கின் ஒரு பகுதி கொண்டு, அதன் மறுபகுதி ஈதெனக் காண வள்ளலார் உதவுகிறார்.

வள்ளுவர் சொல்லை மேற்கொண்டு, அதனை வேறோர் பொருளுக்கு வேறொரு வகையில் பயன்படுத்தியும் வியப்புறுத்து கிறார்.

வள்ளுவர் உள்ளம் காணலில் சிக்கல் ஏற்படுவது அரிதே! அவ்வாறு ஏற்படும் அரிய இடங்களில் சிக்கலை அவிழ்க்க வள்ளலார் முயல்கிறார்; நமக்கும் உதவுகிறார்.

இவ்வெல்லாவற்றினும் மேலாகப் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்னும் வள்ளுவர் வழிக்குத் தம்மை முற்றாக ஒப்படைத்து, உவமையிலா ஒருவராக ஒளி காட்டுகிறார் வள்ளலார்! இவை வள்ளுவரை வள்ளலார் அணுகிய நெறிகள். இவற்றின் விரியே நூல்விரி!

திருநகர் அன்பர், காப்பீட்டுக் கழக மேலாண்மையர் திருமலி மணிமொழியனார் தம் தந்தையார் நினைவுப் பொழிவாக வள்ளுவரும் வள்ளலாரும்' என்னும் தலைப்பில் யான் பொழிவதை அவாவினார். அவ்வவாவுதல் ஆட்கொள்ள என்னுள் முன்னரே முளைத்துக் கிளைத்திருந்த அப்பொருள் விரிவுற்று அடைவு வகையான் ஒருதனி நூலாம் அளவு நல்விளைவாயிற்று.

அன்புப் பணி நினைவளவில் அடங்காதே! செயலுருக் கொண்டு பயன் செய்யவேண்டுமே! நினைந்த என் நேரில், வள்ளலார் வழியே வாழ்வாவது" எனக் கொண்டு வடலூரையே தம் வாழ்விடமாகவும் கொண்டு உள்ளுதோறும் உள்ளெலாம் இனிக்கத் திகழும் பெருமகனார் 'குங்கிலியம்' பழ.சண்முகனார் காட்சி வழங்கினார்! அவர் தலைமையிலே காரைக்குடி 'சன்மார்க்க சபையில்" 'வள்ளுவரும் வள்லாரும்' என்னும் தலைப்பில் யான் பொழிவு செய்வதாம் நேர்ச்சியும் உண்டாயிற்று! பொழிவு பொழிவாகப் போய்விடக் கூடாதே. நூலாக வேண்டுமே!