உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுவாயில்

தமிழ் மண்ணில் பிறந்தாலும் உலகவர்க்கெல்லாம் ஒருபேர் அறச்சாலை அமைத்துத் தந்தவர் வள்ளுவப் பெருந்தகை. அச்சாலை வழியே நடைபயின்று நலங் கண்டோர் பலராகலாம்! அவருள் தலையாய ஒருவராகத் தமிழ் மண்ணில் தோன்றியவர் வள்ளலார்.

வள்ளுவர் வகுத்த அறம் இலக்கணம் என்றால், அவ்விலக் கணத்திற்கு அமைந்த இலக்கியம் வள்ளலார் வாழ்வு.

வள்ளலார் பன்னூல் தேர்ந்த ஓதாக்கல்வியர்; அவர் பயின்ற நூல்களுள் தலையாய ஒன்று திருக்குறள்; சிறாரும் முதுவரும் கற்கவேண்டுமெனத் திருக்குறள் வகுப்பு நடாத்த வழி செய்தவரும் வள்ளலார்.

வள்ளலாரின் திருக்குறள் தோய்வை விளக்கும் சான்றுகள் மிகப் பல. அவற்றைத் தொகுத்த தொகுப்பே ஈதாம்.

திருக்குறளை அப்படி அப்படியே தம் பாடல்களில் பொன்னிற் பதித்த வயிர மணியென வைத்துச் செல்கிறார்

வள்ளலார்.

டங்களில்

"திருக்குறள் வழியது இது" எனக் கற்பார் உணருமாறு, அதன் தொடர்புகளையும் சொற்களையும் சில வைக்கிறார்.

சில இடங்களில், கருத்தைப் பிழிந்து காட்டி "இது வள்ளுவ வழியது' என உணர்த்துகிறார்.

வள்ளுவர் வாக்கை உரையாசிரியன்மார் கண்டு தெளிந்த தெளிவினும் மேல் தெளிவாகவும் விரியினும் மேல் விரியாகவும், தெளித்தும் விரித்தும் செல்கிறார்.

வள்ளுவர் சுட்டும் அடைமொழி ஒன்றை விளக்கும் அருமையைக் கற்பார் களிப்புறுமாறு பலபக்க அளவுகளில் தனிப் பரப்பெனக் காட்டுகிறார். (எ-டு) அழிபசி,உடற்றும் பசி.