உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

209

குழைந்து குழைந்து நின்ற குருவர் வள்ளலார், ஏறாத மேட்டில் ஏறிப்பாடிய பாட்டை எதிராளர் ஏற்க இசைவரோ?

இசைந்தால் என்ன? ஏற்றால் என்ன? எதிர்த்தால் என்ன? ஏசினால் என்ன?

'பழுத்த பலாச்சுளை பார்ப்பவர் இல்லாமல் பயன் படாமல் பாழ்பட்டுப் போகக் கூடாது" என்னும் பற்றுமையும் பரிவும் ஒருங்கே உற்ற பெருமக்கள் சிலர், தம் துணிவுக் கொடையாகவே நமக்கு ஆறாம் திருமுறை வாய்த்ததுவாம்! வள்ளலார் வளம் மெய் வளம் வையக வளமாக வழங்கிய அப்பெருமக்களை, உள்கி உள்கிப் போற்றி மேலே செல்வோம்.

-

www

ஐந்தாம் திருமுறை வரை ஓரீர் இடங்களில் இருந்த சன்மார்க்கம், ஓதாக்கல்வி, சாகாக்கலை வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பொங்குமா கடலாய்த் திகழும் பகுதி ஆறாம் திருமுறை.

இறைமையைப் 'பொது' எனவும், அதன் உறைவைப் 'பொது' எனவும் கண்டது பழந்தமிழகம். அப்'பொது'வே, பொதியில், வள்ளலார் இறைமை இருக்கையை 'வயங்குமணிப் பொது' (3238) வாகக் கண்டு களிக்கிறார். அப்பொதுவியல் என்னெனின் ஆன்மநேயம் - அன்பு - எனக் கண்டு திளைக்கிறார். அவ்வன்பின் சுரப்பார் அதன் சிறப்பை,

அன்புப் பிடியுள் அகப்படும் மலை அன்புக் குடில்புகும் அரசு

அன்பு வலைக்குட்படு பரம்பொருள் அன்புக் கையமர் முது

அன்புக் கடத்தடங்கு கடல்

அன்புயிரில் ஒளிர் அறிவு

அன்பணுவுள் அமைந்த பேரொளி

அன்புருவாம் சிவம்

எனப் பரவிப் பரவித் திளைக்கிறார்.

அன்பாம் பண்பே இறை! அதற்கு, ஓர் உருவம் ஒரு நாமம் ஒன்றும் இல்லை! அவ்வன்பின் மூர்த்த அடையாளம் ஒளி! உள்ளொளி விளக்கம், புறத்தொளி! அவ்வொளி இவர்க்குரியதா? அவர்க்குரியதா? எவர்க்குரியதும் இல்லை! எல்லாருக்கம் உரிய அது 'பொது' பொதுவுக்கு உரிய இடமும் பொது அப்பொதுவே, சன்மார்க்கப் பொது! அப்பொது, எனக்கு மட்டுமன்றி எவர்க்கும்