உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம்

-

34ஓ

நீதிகள் என்ற பலவற்றை எடுத்துக்காட்டிக் கேட்போர் அறிவு மலைக்குமாறு கூறித் தருக்க நெறியிற் சாதிப்பார்; அந்நிலையில் தாம் மேற்கொண்ட புல்லிய நெறிகளைக் கைவிடமாட்டார்; செய்வினை புகுந்து துன்பம் விளைக்குமிடத்துத் தமது பிரமக் கொள்கையைக் கைவிடுவர்; சாகும் பிரமங்களாகிய இவர்கள் தம்மைப் பிரமம் என்று சொல்லும் அறிவு, தாம்புக் கயிற்றைப் பாம்பென்று எண்ணியுரைக்கும் மயக்க அறிவேயாம் எனக் கூறும் இம்மொழி, நாம் பிரம்மத்தாரை நடுக்காதிருக்குமோ?

முற்பாடற் குறிப்பில் (10), "வள்ளல் பெருமான் காலத்தில் திருவொற்றியூர்ப் பகுதியில் 'வேதாந்த தர்க்க குடார தாலுதாரி" என்ற சிறப்புடைய ஒருவர் இருந்தார் என்றும், அவர் எப்போதும் கட்குடியில் வீழ்ந்து கிடப்பார் என்றும் திரு.வி.உலகநாத முதலியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அக்குடிகாரரைத்தான் வள்ளற் பெருமான் நினைக்கின்றாரோ எனத் திரு.வி.க. அவர்கள் ஐயுற்றதுண்டு. என்கிறார் உரைவேந்தர் ஒளவை சு.து.பிற்பாடல்

(11).

பிரமவாதிகளின் புன்மையைப் புகன்றதாகும். ஆறாந் திருமுறை, சாதி, சமய, சடங்கு அற்ற சன்மார்க்க மலைமேல் ஏறிநின்று வையகம் அறிய வள்ளலார் அருளிய பேருரையாகும். எம் சமயமே சமயம், அல்லாதவை சமயமல்ல; எம் சாதியே உயர்சாதி, மற்றவை இழிமையவை; எம் சடங்கே சடங்கு, ஏனையவை ஏற்க பயலாதவை, எனப் பிணக்கு பிளவு பிரிவுப்பட்டு வாழ்ந்த வெறிமையர், வள்ளலார் பொதுமை யுரையைப் பொறுமையாய் எண்ணிப் போற்றுவரோ?

C6

'ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எல்லாரும்

ஒருநிலையர் ஆதல் வேண்டும்

""

என்னும் ஒப்புரவுச் சன்மார்க்கத்தைத், தனித்தனி யாட்டத்தில் தழைத்து மகிழ்பவர் ஏற்பரோ?

உலகவரைப் போலத் தெய்வம் பலப்பல சொல்லி, திருத்தலந்தோறும் சென்று 'மூர்த்தி தலம் தீர்த்தம்' பாடுதல் விடுத்து, உருவிலா உருவ ஒள்ளொளி, வழிபாட்டை ஒரு சமயமாகக் கொண்டார் வள்ளலார்.

ஊரெலாம் கூடிக் கூடிப் பரவவும் பாராட்டவும், ஆரவாரம் இன்றிச், சடங்கும் அறவே இன்றி, ஒளிவழிபாடும் திருவடிப் புகழ்ச்சியும் புலவூண் துறந்த அந்தண்மையும் உயிர்ப்பாகக்