உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வள்ளலார் கண்ட சாகாக்கலை

"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும்".

இது இரண்டகரைச் சுடாதா?

“கரையில் வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல் கதறுவார், கள்ளுண்ட தீக் கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு

கடும் பொய்இரு காதம் நாற

வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ மணங்கமழ் மலர்ப்பொன் வாய்க்கு

மவுனடம் இடு வார் இவரை மூடர்என ஓதுறு வழக்கு” (10) என்கிறார்.

207

'காக்கைக் கூட்டம் கூடிக் கலாமிட்டுக் கதறுவது போல்வார்; கள் குடித்த தீய நாற்றமும் வாய் ஊத்தை நாற்றமும் காதத் தொலைநாறவும் பொய் புளுகு மூட்டை இருகாதத் தொலை நாறவும் அளவின்றித் தருக்கம் புரிவார். ஆனால், சிவமணம் கமழத் திகழும் மலரன்ன வாயினரைக் காணின் வாய்மூடிக் கிடப்பார்; இத்தகு மூடரை நெருங்குதல் ஆகாது" என்கிறார். இந்நாற்றப் பிறவியர் வள்ளலாரை ஏற்றுப் போற்றுவரா?

மேலும் இப்பாடலை அடுத்தே,

“நாம்பிரமம் நமையன்றி ஆம்பிரமம் வேறில்லை

நன்மைதீ மைகளும் இல்லை

நவில்கின்ற வாகியாந் தரம்இரண் டினும்ஒன்றே

நடுநின்ற தென்று வீணாள்

போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே

போதிப்பார் சாதிப்பார் தாம்

புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினை ஒன்று

போந்திடில் போகவிடுவார்

சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு தாம்புபாம் பெனும் அறிவுகாண்" (11)

என்று பாடுகிறார்.

"நாமே அப்பிரமமாகிய பெரிய பொருள்; நம்மையன்றிப் பிரமம் என வேறே இல்லை; நன்மை தீமை என்பவை இல்லை; சொல்லப் படுகின்ற பாகியம், அந்தரம் என்ற இரண்டுமே பொருந்த வழிபாடு நடுநிலையாயது என நாளை வீணாக்குவர்; பிரம