உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம் -34 ஓ

ஏன், வெளிவரக் காலத் தாழ்வாயது ஆறாம் திருமுறை எனின், அத்திருமுறைப் பாடலில் இருந்த சமயப்புரட்சிக் கருத்துக்களே தடைக்குக் காரணமாம் என்க.

வள்ளலார் விளங்கிய காலத்திலேயே அவரே அப் பாடல்கள் வெளிப்பட விரும்பவில்லை. அவர்க்கு அணுக்கராக இருந்த அன்பர்களும் வெளியிட ஆர்வம் காட்டவில்லை. மற்றைத் திருமுறைகளை வெளியிட்ட தொழுவூரார் தாமும் ஆறாம் தொகுதியை வெளியிட்டிலர். சமயப்புரட்சி, சமயச் சீர்திருத்தம் என்பவை மட்டும் தடையாயிற்றில்லை. சாதிச்சழக்கு, சடங்குப் பொய்மை, உருட்டுப்புரட்டு வாழ்வு,புலைவேள்விக் கண்டிப்பு, உருவ வழிபாடற்ற ஒளிவழிபாடு என்பனவெல்லாம், சமய-மத-சாதி-சடங்கு வெறியர்க்கு ஏற்கத் தக்கனவாக இல்லை. வெளிப்பட நிகழ்ந்த மருட்பாப் போர் போல்வது அன்று, இவ்வகப்போர், சாதி சமயச் சடங்குகளே வாழ்வு மூலமாக்கிக் கொண்டவர்க்கும், கொண்டவரைச் சார்ந்தவர்க்கும் வள்ளலார் கருத்து பேரிடியாக இருந்தமையாலேயே ஆறாம் திருமுறை வெளியீட்டுக்கு வள்ளலாரும் இசைந்திலர்; ஆர்வலர்களும் ஈடுபட்டிலர்.

பின்னைப் பகுத்தறிவுப் பெரியாரால், தலைமேல் கொள்ளப் பட்ட வள்ளலாரைச், சமயப் பெரியாரென அந்நாளில் இருந்தவர் ஏற்றிருப்பர் என, இந்நாளில் நம்மால் கூட எண்ணத்தக்கதாக ல்லை, என்றால் அந்நாள் நிலை எப்படி இருந்திருக்கும்? அச்சிடப்படாவிட்டாலும் அப்பாடல்கள் அணுக்க ஆர்வலர் சிலரளவிலேனும் படிக்கப்படாமல் இருந்திருக்க முடியாதே! காரல் மார்க்கசு, உரூசோ, சாக்ரடீசு, தால்சுதாய், இங்கர்சால் இன்னவர் பட்டபாடுகளை எண்ணும்படி தூண்டுகிறதே இது. சமயப் புரட்சியாளர் கிறித்து, நபிகள் பாடுகள் உலகம் அறியாதவை அல்லவே! வள்ளலார் புரட்சி, இவர்கள் செய்த புரட்சி எவற்றுக்கும் குறைத்து மதிப்பிடும்படியாக இல்லையே!

சமயச் சடங்கரையும் ஏகான்மவழியரையும் கந்த கோட்டப் பாடலிலேயே கண்டிருக்கிறார். இரண்டகரை இனம் கண்டு ஒதுக்குகிறார்.

'ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்."

இவ்வளவில் நின்றாரா?