உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சன்மார்க்கம் (நன்னெறி)

சமரசம், சன்மார்க்கம், அருட்பெருஞ்ஜோதி ஆகிய சொற்களை எவர் நினைத்தாலும் சொன்னாலும் முற்பட நின்று ஒளிமுகம் காட்டுபவர் வள்ளலாரே யாவர்.

வள்ளலார் இளந்தைப் பருவத்திலே வழிபடு கடவுளாகக் கொண்டவர் சென்னைக் கந்த கோட்டப் பெருமானே என்பது அவர் வரலாறு. அவர் பாடிய தெய்வமணிமாலை, அக்கந்த கோட்டத்தில் பாடப்பட்டதே. தெய்வமணி மாலை, பாடல்களையுடையது.

31

திருத்தணிகையையும் நிரம்பப்பாடினார். இவை திருமுருகன் திருக்கோயில்கள். குறிஞ்சிப்பாடியை அடுத்த சிங்கபுரிக்கோயில் அடிகளால் பாடப்பட்டது. அதுவும் முருகன் கோயிலே.

திருவொற்றியூர், திருவலிதாயம், திருமுல்லைவாயில், புள்ளிருக்கும் வேளூர்,திருவாரூர், திருவதிகை, திருவண்ணா மலை, திருமுதுகுன்றம், திருத்தில்லை ஆகிய திருக்கோயில் களையும் பாடினார். இவை சிவபெருமான் திருக்கோயில்கள்.

திருஎவ்வுளூர், திருக்கண்ணமங்கைத் திருக்கோயில் களையும் வள்ளலார் பாடினார். இவை திருமால் திருக்கோயில்கள்.

இவற்றைத் தவிர, ஏழுகிணறு துலுக்காணத்தம்மனையும், கருங்குழி விநாயகரையும் வள்ளலார் பாடியுள்ளார்.

முருகு முதலாகப் பெருகிய வழிபாடு, வடலூர் வாழ்வில் ஒளிவழிபாடாகத் திகழ்கின்றது. சமயங்கடந்த சால்பில் ஓங்குகின்றது. அவர் மார்க்கம் 'சன்மார்க்கம்' ஆயது. அதனைப் பற்றிய பாடல்கள் ஆறாம் திருமுறையிலேயே பெரிதும் இடம் பெற்றன. முன்னரே பாடிய பாடல்கள் சில ஐந்து திருமுறை களிலும் இடம்பெறாமல் ஒதுக்கி வைக்கப்பட்டன. வடலூர்ப் பாடல்களும் வெளிப்படவில்லை.

வள்ளலார் மறைவின் பின்னரே, சோடசாவதானம் தி.க.சுப்பராய செட்டியாரால் (1885) வெளியிடப்பட்டது!