உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

211

ஒப்புமா? தற்செருக்கே வடிவாயவர்க்குத் தன்னொடுக்கப் பாலபாடம் தானும்புரியுமா? ஆற்றாமைப் பதிகம் முதல் முறையீடு ஈறாக நான்கு பதிகங்களும் தம் குறையைத் தழுதழுத்துத் தழுதழுத்துக் கூறியதாகும். பின்னும் பல உள. கறையும் குறையும் இலாத நெஞ்ச வெளிப்பாடு இஃதாம்.

'சாகாத கல்வி' அறியவும், மரணபயம் தவிர்த்திடும் சன்மார்க்கம் அறியவும் தமக்குள்ள வேட்கையையுரைக்கிறார்.

இறைமையைத் தந்தைமையாய்த் தாம் பிள்ளைமையாய்ப் பெருகிய வேட்கையில் பிறந்தவை பிள்ளைச் சிறுவிண்ணப்பமும், பிள்ளைப்பெரு விண்ணப்பமுமாம்.

"சிதம்பரம் என்றும் பெரும் புகழ்க்கோயில் நடைமுறை தமிழ் மறைக்கு இணங்கவும் ஆகம நெறிக்கு அமையவும் இயலவில்லை; சீர்கேடான வழியில் செல்கின்றது; இதனை, மறை ஆகமம் ஆகியவை கூறுமாறு நடைபெறப் புதுப்பிக்க இச்சைப்படுகின்றேன்" என்கிறார்.

திருவளர் திருச்சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில் உருவளர் மறையும் ஆகமக்கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி மருவளர் மலரின் விளக்கிநின் மேனி

வண்ணங்கண் டுளங்களித் திடவும்

கருவளர் உலகில் திருவிழாக் காட்சி

காணவும் இச்சைகாண் எந்தாய்

என்பது அது (3405) "சிதம்பரம் கோயில் திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெற விளக்கம் செய்யும் பொருட்டாகவும்" என்றும் சமாதிக்கட்டளையில் தெரிவிக்கிறார்.

கோயிலைப் புதுக்குவது மட்டுமன்று, மலர் பெய்து மலர் பெய்து திருமேனி அழகுகண்டு உள்மகிழவும் திருவிழாக் காட்சி எடுத்துக் காணவும் வேண்டும் என்கிறார். நேரே சென்று தாமே மலரிட்டு விளக்கிட்டு எழில்மேனி கண்டு இறைஞ்ச வேண்டும் என விரும்புகிறார்.

பொதுமையைக் கெடுக்கும் பூதமாகவே உருக்கொண்ட தீக்கிதர், இந்நாளிலேயே திருச்சிற்றம்பல மேடையில் அப்பெருமானே பொருளாகப் பாடிய மணிவாசகர் வாசகப்