உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

பாடலைப் பாட ஒப்பாது உலைக்களமாய் எரிபவர், அந்நாளில் எப்படித் திருமுகம் காட்டியிருப்பார்?

அருண்மைக்கு அடைபட்டு விட்ட அக்கோயில் நிலை என்ன செய்தது வள்ளலாரைத் தனிக் கோயில்காண ஏவியது.

தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும், சங்கம்

சார்திருக் கோயில்கண் டிடவும்

துங்கமே பெறுஞ்சற் சங்கம் நீ டூழி

துலங்கவும் சங்கத்தில் அடியேன்

அங்கமே குளிர நின்றனைப் பாடி

ஆடவும் இச்சைகாண் எந்தாய்.

எனச் சங்கம்,கோயில், சபை என்பவை காண ஏவுதல் பாட்டு

து.

சங்கம் கண்டாரா? கோயில் கண்டாரா? சபை கண்டாரா? எல்லாம் கண்டார். அவர் விரும்பியவாறே,

சங்கத்தில் அடியேன்,

அங்கமே குளிர நின்றனைப் பாடி

ஆடவும் இச்சைகாண் எந்தாய்

என்பது நிறைவேறிற்றா? நிறைவேறக் கிளர்ந்த போதே, "பழகிப் போன பேய்மைச் சடங்கு ஆங்கும் தலைகாட்டிற்று; தலைவிரித்து ஆடவும் தொடங்கிற்று! எப்படி அறியலாம்? வள்ளலார் எழுத்தாலேயே அறிய முடிவதுதான் அவலம்! அவலத்தில் அவலம்! அவர் வாழ்நாளின் போதே, அவர் கண்முன்னரே நிகழ்ந்தன; அரங்கேற்ற மாயின!

ஒழுக்கக்கட்டளை

சாலையில் உள்ளார்க்கு இட்ட (9.3.1872)யில், இந்தச் சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டா கிறது. அந்தச் சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் பட வேண்டும் என்று எழுதியுள்ளார்.