உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

213

சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி (25.11.1872) என்பதில், இங்கே வசிக்கம் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம். அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டா யினாலும் அல்லது உண்டாகிறதாயிருந்தாலும், உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும். அப்படியிருத்தல் மேல் விளைவை யுண்டு பண்ணாதிருக்கும்.

அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும், அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர் களோடு மறுபடி அத்துவேஷத்தை ஒருங்கேவிட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது. அப்படி மருவாதவர் களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது. அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும். அப்படித் தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தலனாவசியம். அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம் விட்டுப் போய் விடத்தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது என்னும் கட்டளையுள்ளமை உண்மையை உணர உதவுகின்றது.

சித்திவளாக விளம்பரமும் (08.09.1893) சில தெளிவுகளை உண்டாக்குகின்றது.

சித்தி வளாகத்தில் வந்திருக்கின்றவர்களும், வருகின்றவர் களும், வருபவர்களுமாகிய ஜனங்களுக்கு அறிவிப்பது.

மேல்குறித்த விடத்தில் இந்த மாதத்திற்கடுத்த புரட்டாசி மாதம் ஐந்தாம் தேதியில் அற்புத விளக்கம் நேரிடுவதாக ஓர் வதந்தி வழங்கப்படுகின்றது. அது கேள்விப்பட்டு நம்புதலோடு நீங்கள் நீர்களும் பொருள் வகையாலும் தேக வகையாலும் உழைப்பெடுத்துக் கொண்டு பின்பு நிட்டூரப்பட்டுக் கொள்ளுதல் வேண்டாம். அந்தக் கேள்வி உண்மை யல்ல. இவ்விடத்தில் அற்புதம் விளங்குவது மெய்யோ பொய்யோ, இந்தக் காலமோ எந்தக் காலமோ, ஆகலில் இந்த அறிவிப்பினால் ஜாக்ரதையோடு உங்கள் உங்களுக்கு அடுத்த காரியங்கள் எவையோ அவைகளைச் செய்வீர்களாக என உலக அறிவிப்புச் செய்கின்றார்.