உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் -34

அன்பர் ஒருவர் (1870 சூன் 8) ஒருவர்க்கு "நம் பெருமான் இப்போது எவ்விடத் தெழுந்தருளியிருக்கின்றது. அவ்விடத்திய காரியங்களை யார் பராமரிக்கின்றனர்கள். இதுவிபரங்களை யுடனே கட்டளையிடும்படி கோருகிறேன். அந்தப் பக்கங்களி லிருந்து இங்கு வருபவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றிய படியே சிலபல சொல்லுந்தோறு மனந்துடிக்கின்றது. ஆதலால் உண்மை விடயங்களை யுணர வருள் செய்தல் வேண்டும்." என எழுதுகிறார். சென்னையில் இருந்து தொ.வேலன் (தொழுவூர் வேலாயுத முதலியார்) எழுதிய கடிதம் இது.

இவற்றால் அடிகளாரை அடுத்திருந்தாரும் முழுதுறு சன்மார்க்க நெறியராய்ப் பின்பற்றி நின்றார் அல்லர் என்றும், அவர்களாலும் சங்கம் சபை கோயில் கடமைகள் அடிகளார் நினைத்த வண்ணமே முழுதுற நிறைவேறவில்லை என்றும், பல்வேறு வதந்திகளும் அவற்றால் சஞ்சலமும் உண்டாயின என்றும் அறியலாம்.

இனி நாட்டவர் நிலையோ, வழிபாட்டோர் நிலையோ, அடியார் பக்தர் என்பார் நிலையோ வள்ளலார் உள்ளம் ஏற்கும் வகையில் இல்லை. “சன்மார்க்கம் என்மார்க்கம் நன்மார்க்கம் என அமைந்தார் அல்லர்”. சமயத்தில் புகுந்துள்ள கறைகளை வெளிப்பட எடுத்தெடுத்துக் காட்டிக் கண்டிக்கத் தொடங்கினார். அக்கண்டிப்பு இன்னசமயம் என்று இல்லாமல் பொதுமை நெறிக்குக் கேடாக இருப்பவற்றை யெல்லாம் கண்டித்தார்.

பிள்ளைச் சிறுவிண்ணப்பத்தில் (3408),

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்

கணமும்நான் சகித்திட மாட்டேன்.

என்று தம் நிலைவிளக்கம் அறைகிறார். பிள்ளைப்பெரு

விண்ணப்பத்திலே,

“தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம்

சார்ந்திட முயலுறா தந்தோ!

கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக்

கனிவுற வைத்தனர் ஆகிப்,