உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

219

குலம் குடி என்பவை மாந்தர்க் குரியவை. குடி என்பது குடும்பம்; பல குடும்பம் சேர்ந்தது குலம்.

"குலமும் ஒன்றே குடியும் ஒன்றே”

என்பது கபிலரகவல்.

CC

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்பது திருமந்திரம். மக்கள் மன அறிவர்; ஓருயிர்த் துடிப்பை ஓருயிர் உணர்ந்து ஒன்றனுக்கு ஒன்று உருக்கமாய் உதவியாய் வாழ்தல் மன அறிவு மாண்பு. அந்நிலையில்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதும்,

“யாதானும் நாடாமால் ஊராமால்" என்பதும் விளக்கமுறும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்னும் பெரு நெறி ஆட்சி கொளும்.

எல்லா உயிரும் இன்புற்றிருப்பதல்லாமல் வேறு ஒன்று கருதா விழுப்பம் மாந்தர் அனைவருக்கும் உண்டாகும். இவற்றுக் கெல்லாம் தடையாவது சாதி.

"சந்நியாசிக்கும் சாதி அபிமானம் உண்டு" என்னும் சால்பிலாப் பழமொழி என்ன சொல்கின்றது?

சந்நியாசியாகிய துறவியும் எவ்வெவற்றைத் துறந்தான் எனினும் சாதியைத் துறவான் என்பது தானே பொருள்?

சாதி வெறியன் காட்டும் பற்று, அறம், அருள்,நட்பு, உதவி என்பன வெல்லாம் எதுவாக இருக்கும்? அச்சாதிச் சார்பை அன்றி வேறாக இராதே!

ஒருவன் எத்தகு கேடன் - தீயன் - பாவி -எனினும் தன் சாதியான் எனின், அக்குறைகளை எண்ணாமல் அவனைத் தழுவிக் கொள்வதும் பாதுகாப்பதும், பொதுவறக்கேடு அல்லவோ!

சாதிச்சண்டையைத் தூண்டும் சண்டாளர் யார் எனின், சாதி அரசியலே அரசியல் என ஆகிப்போனவர்.

அறியாமையால் சாதி மோதல் ஏற்படின் அறியும்போது தானே அணைந்து போகும்.

அறிந்தே சாதி மோதலை உருவாக்கும் அறிவறந்த சாதி அரசியலர், சாதி இதழர்,சாதித் தலைவர் சாதியை என்றும் அணையவிடா எரிதழல் ஆக்குவர்.