உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

சாதியில் உயர்வு தாழ்வு தீண்டாமை பாராமை என்பன வெல்லாம். ஏற்பட்ட கெடு, தம்மொத்த மாந்தரை, விலங்காய் புழுப் பூச்சியாய் நோக்க வைத்தது. விலங்குகளுக்குத் தரும் உரிமையையும் தாராமல் ஒடுக்கியது. புழுப்பூச்சியினும் இழிமை யாய் நசுக்கியது. "நான் தாழ்த்தப்படுகிறேன், இழிமைப்படுத்தப் படுகிறேன்" என்பது தானும் உணரக் கூடா நிலையில், “அது தலைவிதி' எனப்படும் தன்னல நம்பிக்கை ஊட்டப்பட்டது.

மலைப்பாதைப் படிகள் போலச்சாதிகள் ஒன்றன் கீழ் ஒன்றாய் எண்ணவைத்து உச்சியில் பார்ப்பனீயம் நின்று கொண்டது. அப்பார்ப்பனீயத்தை அடுத்து நின்ற வேளாளச்சாதி, எனக்குமேலே பார்ப்பான் மட்டும் தானே,ஆனால் எனக்கு கீழே எத்தனை சாதிகள்" இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்! சூத்திரச் சாதிகளுக்குமேல் நாங்கள் நிற்கிறோம்,"சற்சூத்திரச் சாதியர் நாங்கள்” என்று அவர்களும் பார்ப்பனத் தன்மையராய் அவரினும் கூட அழுத்தமான தன்மையராய்ச் செம்மாந்து நின்றனர்.

நாலாம் படிக்கட்டில் நின்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்டவர் தாமும் தமக்குக் கீழே மூன்று படிக்கட்டுகள் இருப்பதை எண்ணி குற்றமில்லை நமக்குக் கீழேயும் உள்ளனர் என அமைந்தனர். கடைப்படிக்கட்டாரோ கடவுள் விதித்த விதி, மேலே உள்ளவர்களுக்கு அடித்தொண்டு செய்து அதன் பயனாய் அடுத்த பிறவியில் மேல் படிக்கட்டைப் பெறலாம் என ஒடுங்கிவிட்டனர்.

விளக்குமாற்றுக்குப் பட்டுக்குஞ்சம் என்பது போல க்கொடும் சாதிப் பிரிவை வருணாசிரம தருமம்' என 'மேலோர்!' வழங்கினர், 'மேதையர்!' பரப்பினர். இதற்குத் தெய்வத் தன்மை தந்து வஞ்ச நெஞ்சை நிலைப்படுத்தினர்.

.

பார்ப்பனன் மட்டுமே கோயில் கருவறைக்குள் கால் வைக்கப் பிறந்த பிறவி; அவன் புனை சுருட்டு மந்திரங்களே வழிபாட்டுக்கு உரியது. அவன் பிறவி தெய்வப்பிறவி; அவன் மொழி தேவமொழி; வழிபாட்டுரிமை அவனை அன்றி எவனுக்கும் இல்லை.

வழிபாட்டுக்கு வருவோர் சாதிக்கட்டுக்குத்தக நிற்க வேண்டும் தீண்டாதாரும் பாராதாரும் கோயில் சுற்றுப் பக்கத்திற்குத்தானும் வருதல் தீட்டு என்றனர். அவர் வழிநின்ற ஆட்சியர் நிலை என்ன? அவரும் பார்ப்பனர்க்குச் சூத்திரர் தாமே! பார்ப்பனர் நலம் எவை எவை என்பது கண்டு கண்டு