உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

221

தொண்டு புரியத் தானே அவர் பிறந்த பிறவியர்! சாதிச் சிறுமையை அதன் சண்டாளத் தனத்தை என்ன தான் எழுதுவது?

சாதிச் சிறுமை தொழிலை விட்டதா?

அருளாளராக எவர் இருப்பினும் அவர், அந்தணர், ஆட்சி அமைச்சு அலுவல் பார்ப்பவர், அரசர் கொள்வதும் கொடுப்பதுமாம் பண்டமாற்றர், வணிகர் உழவும் தொழிலும் புரிந்த உதவியர், வேளாளர்.

வை சாதி யல்ல! எவரும் ஆளலாம்; வணிகம் புரியலாம்; தொழிற் கடனாற்றலாம்; எவரும் அருள்நெறி வாழ்வினரா கலாம். அவரவர் நிலையில் அவரவர் சிறப்பானவரே! இ தொழில் செய்வார் உயர்ந்தோர், இத்தொழில் செய்வார் தாழ்ந்தோர் எனப்படவில்லை.

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி

என்று ஒளவையார் கூறினார். (நல்வழி : 3)

“வையகம் காப்பவ ரேனும் - சிறு

வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்தே - புவி போற்றிடக் காப்பவர் மேலோர்”

என்று பாரதியார் பாடினார்

பாவேந்தர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதலியோர் சாதி ஒழிப்பில் பேரக்கறை காட்டிப் பாடுபட்டனர். வள்ளலார் கண்ட சன்மார்க்க சபையோ சாதிக்கல்லைப் பொடிப் பொடியாக்கியாக வேண்டும் என்பது அது. சாதி நோய்த் தீர்வுக்கு நன்மருந்து சாதிக்கலப்பு மணமே யாம் ஆயினும், வேறிரு குறிப்புகளும் எண்ண வேண்டும்.

வருணாச்சிரம தருமம் என்று பேசிக் கொண்டு அரிசன் எனப்பெயர் மாற்றத்தால் உயர்த்த வேண்டும் என்று நினைப்பது முரண்பட்டது. அவ்வாறே, "சாதி ஒழிப்பே எம் குறிக்கோள் சாதிச் சலுகையை நாங்கள் விடமாட்டோம்" என்பதும் முரண். பள்ளி அலுவலகம் தேர்தல் ஆகிய எவற்றில் சாதிமை இருப்பினும் சாதிக்கு நீர்விட்டும் உரமிட்டும் வளர்ப்பதேயாம்!