உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ்வளம்

34ஓ

வெந்நீர் விட்டாலும் போதாது; வெட்டிச்சாய்க்க வேண்டும். முள் மரமாகிய சாதியை, நீர்விட்டும் உரமிட்டும் காவல் காத்தும் வருதல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் செயலேயாம்.!

மாந்த நேய அடிப்படையில் பொருளியல் அடிப்படையில் சலுகைகள் இருப்பதே நேர்மையும் நெறிமையும் மானப்பெறுமாம். சாதிமை ஒழிப்பொடு கூடிய மாந்தநேயச் சால்புக் கொடையே மானப் பேற்று மாண்பாம்! இனிச் சமயம் - மதம் என்பவை பற்றிக் காணலாம்.

சமயம் (மதம்)

சமயத்தைத் தோற்றுவித்த பெருமக்கள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களாக வாழ்ந்தவர்கள்; உள்ளும் புறமும் ஒத்த தூயர்; உலகம் உய்யக் காலத்தால் வழிகாட்ட வந்த ஒளிவிளக்கு அன்னவர். அவர்கள் வழியில் வந்தோர் -பரப்பினோர்-பின் பற்றினோர் வாயால் கொள்கை சொல்லி, வாழ்வால் போற்றா தவராகப் பெரும்பாலோர் ஆகிவிட்டனர். அருவியின் தூய்மை, அழுக்கு சேறு முடை நாற்றம் கழிவு சேரச் சேரச் சாய்க்கடை யாவது போலப் புகழ் வாய்ந்த சமயத்தைச் சழக்காய் குப்பையாய் பொய் புரட்டு ஏமாற்று வஞ்சம் கொள்ளை கொலை என்பவற்றுக்கு இடமாக்கிவிட்டனர். இந்நிலையில் சமயம் முட்டல் மோதல் பிணக்கு பித்தலாட்டப் பேய்மைக்கு அடிமைப்பட்டுப் போயதால் நல்லோர் வெறுத்தொக்கும் பொருளாயிற்று. இந்து சமயமோ சாதிச்சழக்கின் விளை நிலமாகவே மாறிவிட்டது.

எந்தவொரு சமயமாவது தனக்குள் முட்டி மோதிப் பிணங்காமல் இருக்கக் காணமுடிகிறதா? அரசியல் சீரழிவுக்கு முற்பட்ட சீரழிவு சமயச் சீரழிவு என்று சொல்லத் தக்கதாகத் தாமே உள!

“ஒன்றது பேரூர் வழிஅதற் காறுள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்

குன்று குரைத்தெழு நாயை ஒத் தார்களே”

மணிமேகலையில் வரும் சமயக் கணக்கர் திறம்கேட்ட காதை என்ன?

நீலகேசி, குண்டலகேசி, வாதப்போரென்ன?