உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

223

சமண - பௌத்த மதங்களை வேதமார்க்கம் முட்டியழித்து நாடுகடத்திய தென்ன? கழுவேற்றிய கதை என்ன?

கசினி, கோரி காலமுதல், இன்றுவரை நிகழும் கோயி லிடிப்பு - சிலையடைப்பு என்பவை என்ன? 'சசியா' வா என்ன? தென்கலை வடகலைச் சிக்கல் என்ன?

"அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு இப்பழமொழி உள்ளீடு என்ன?

'அஞ்ஞானிகளே' விளிப்பு என்ன? சிலுவைப் போரென்ன? கடவுளைப் படைத்தவன் முடாள்','சமயம்-மதம்- அபினி' என்பவை கிளர்ந்தமை ஏன்?

ஏன்?

"அருட்பா - மருட்பா' வழக்கு - கண்டன அறிக்கைகள்

சமயம் என்பது பக்குவப்படுத்துவது; முட்டுவது மோதுவது அன்று. சமைப்பது என்ன? பக்குவப்படுத்துவது தானே! சிலை சமைப்பது என்பது என்ன? சிலை வடிப்பது தானே! பெண்ணொருத்தி சமைந்தாள் என்றால் பக்குவ நிலையுற்றார் என்பது தானே! பக்குவப்படுத்த வந்ததே பக்குவத்தைக் கெடுத்தால் எதுதான் பக்குவம் ஆக்குவது? ஆதலால் பக்குவமே வடிவாகிய வள்ளலார் சமயச் சழக்கைக் கடந்து சமயச் சார்பில் ஓங்கிச் சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம் கண்டார். சமயத்தின் மதத்தின் பேரால் ஆன்ம நேயம் குன்றாமல் குறையாமல் இருக்கவும், ஆன்மாவுக்கு ஆன்மா உருக்கம் கொண்டு உதவி நிற்கவும் வழிகாட்டினார். அதே பொழுதில் இயற்கை இறைமையை ஒப்பாரையும் ஒப்பிச் சென்றாரும் அல்லர் என்பது எண்ணத்தக்கது.

வள்ளலார் தம்மை இயற்கை விளக்கம், சமய நெறியில் செலுத்தாது சன்மார்க்கத்தில் செலுத்திய வகையைச் சுட்டுகிறார்.

“தீதுநெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்

திருவருள் மெய்ப் பொதுநெறியில் செலுத்தி”

(3053)

“சமயமதக் குழிநின் றென்னை எடுத்தானை"

(3944)

“சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெருநெறியில்

செலுத்திய நற்றுணையே”

(4165)

“சமயநெறி மேவா தென்னைத் தடுத்து”

(4783)

என்று இன்னவாறு சுட்டுகிறார்.