உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

மாறுபட்டவை, வேறுபட்டவை, முட்டுபவை, மோதுபவை எனப் பேயாட்டமும், கூட்டம் சேர்ப்பதும் கொள்ளையடிப் பதுமாம் நோக்கில் அருளாளர்களால் ஆன்மநேய சூதாட்டக் களமாகி விட்டதுமாம் சமயங்கள் மெய்நோக்கின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை ஆதலின், ஒன்றாய் ணையத் தக்கவையே என்பதை,

“பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே”

என்பதால் விளக்குகிறார்.

(2118)

கடலுக்குப் பல்வேறு ஆறுகள் கூடுவதால் 'புணரி' என்பதொரு பெயர். வள்ளலார் இறையொடும் இணையும்

ணைவைப்

"புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல்" (4088) என்பார்

சாதி சமயம் மதம் ஆகியவை நீங்கி,

“ஒன்றெனக் காணும் உணர்ச்சி என் னுறுமோ?"

என அவாவி நிற்கிறார் வள்ளலார்.

சாத்திரம் சடங்கு :

(4077)

சாத்திரம் சடங்கு இவற்றைத் தவிர்ப்பானேன்? இவற்றால் ஏற்படும் கேடென்ன?

எந்த இயற்கை விளக்கம் ஓரறிவு முதல் பேரறிவாம் ஆறாம் அறிவு வரை விளக்கம் செய்து இயற்கை விளக்கப் பிறவியாய்ச் செய்ததோ அந்த இயற்கை விளக்கப் பிறவியைத் தாழ்த்தித் தாழ்த்தி விளக்காய் பறவையாய் பாம்பாய் புழுவாய் பூச்சியாய் மரமாய் புல்லாய் இயற்கை விளக்கமிலாக் கல்லாய் மண்ணாய்க் கீழ்மைக் குழிக்குள் தள்ளுவன சாத்திரமும் சடங்கும். ஆதலால் 'சாத்திரம் சடங்குக் குப்பை' என்றார் வள்ளலார். பொய்க்கதை புனைசுருட்டு பொருட்பறிப்பு இவற்றைத் தன் மூலதனமாகக் கொண்டு கொழுப்பது சாத்திரமும் சடங்கும். ஆறறிவு படைத்த பிறவி தற்சிந்தனை இழந்து ஆடு மாட்டுக் கும்பலாய்க் கூடித் தலையாட்டிப் பிறவியாய்த் தோற்றம் தந்து கொத்தடிமையாய்க் குன்றிப்போகச் செய்தவை சாத்திரமும் சடங்குகளுமேயாம்.

எக்குற்றமும் செய்; இதனைக் கொடு; உனக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என மூளைச் சலவை செய்வது அது. சோதிட நம்பிக்கை ஆக்கித் தன்னம்பிக்கையை