உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

225

அறவே தொலைப்பது சாத்திரமும் சடங்குமாம். கோயில் வளத்தைத் தம் வளமாக்கி, கோயிலுக்கு உரிமைப்பட்ட மக்களைக் கோயிலுக்குப் புறம்பே தள்ளி, அம்மக்கள் மொழியைத் தீட்டு மொழி என்றும் நீச்ச மொழி என்றும் பழித்துப் பார்ப்பன மயமாக்கியது சாத்திரமும் சடங்குகளுமேயாம். ஆதலால் அவற்றைக் குப்பையாகக் கொட்டி மண்போட்டு மட்கிப் போகவைக்க வேண்டும் என்று வள்ளலார் கிளர்ந்து நின்றார்.

சாத்திரம் சடங்குகளுக்கு ஒப்புகை வழங்கி அதன் நிலைப்பாட்டைத் தெய்வ சம்மதம் ஆக்குவது போல இல்லாக் கதைகளை எல்லாம் இட்டுக் கட்டிப் புராணங்கள் படைத்தனர். அறிவறிந்த தமிழரையும், மண்ணின் மைந்தர் கொடை வளத்தால் தோன்றிய மடங்களையும் சாத்திரமும் சடங்குகளும் வளைத்துக் கொண்டன. தமிழர் பண்பாட்டு நெறி இயற்கை வழிப்பட்ட மெய்யியல் இறைமை நெறி, ஒப்புரவு நெறி ஆகியவை ஒடுக்கப்பட்டன; ஒழிக்கவும்பட்டன. இயற்கை அறிவுச் சமயம் வீழ்ந்த நிலை இது. இதனால் மக்கள் உய்வுக்குச் தேவைப்பட்ட சன்மார்க்கக் குடையையும் கொடியையும் எடுத்து வழிகாட்ட வெளிப்பட்டார் வள்ளலார். அருட்பெருஞ்சோதித் தனிப்பெருங்கருணைப் பரப்பாளியானார்.

கலையில் கற்பனை இருக்கலாம். வாழ்வை, அக்கலைக் கற்பனை ஆக்கிவிடுவது ஆகாதே! வாழ்வை நடிப்பாய் கூத்தாய் மேடைப் பொருளாய் பார்வைப் பொருளாய் பொழுது போக்குப் பொருளாய் ஆக்கிவிடக் கூடாதே என்பதால், கலையுரைத்த கற்பனைக் கண்மூடி வழக்கத்தைக் கடிந்தார் வள்ளலார்.!

தருக்கம்

தருக்கம் வேண்டா என்றார் வள்ளலார் - ஏன்?

தருக்கம் பொருளுண்மை காட்டுவதற்குப் பதிலாகத் தருக்கம் செய்பவன் மூளைக் கூர்ப்புப் பொருளாக அமைந்து விடுதல் உண்மை. முறை மன்றத்தில் வாய்ச்சாலம் வல்லார் வழக்கு வெல்வதும், மெய்யர் வழக்குத் தோற்பதும் கண்கூடு அல்லவா!

“பொய்யுடை ஒருவன் சொலல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே”

என்றும்,