உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

ஒரு குழந்தை ஓடி வருகிறது!

பசிக்கு உணவு கேட்டுக் கை நீட்டுகிறது. அச்சிறுகையில் ஒருபிடி சோறு விழுகிறது! இரண்டாம் முறையும் சிறுகை நீண்டு வருகிறது! இனியும் கொடுத்தால் உழவுக்கு வேண்டிய முதல் குறைந்து போகும் என்று எண்ணிய பெரிய கை 'இல்லை' போ என உதறுகிறது!

233

இப்படிக் கருமித்தனமாகச் சேர்த்ததை உழவுக்கு முதல் குறையாமல் வைத்து விளைவித்ததை எப்படிச் செலவிடுகிறது?

பேய்த்தனமாகக் கொண்டாடும் விழாவுக்குச் செலவிடுகிறது. கொட்டு - குரவை-மேளம்-வாணம் என வாரி வாரி வீசுகின்றது! ஊரையெல்லாம் - பக்கத்து ஊரையெல்லாம் - கூட்டி வைத்து குடி, கூத்து, கும்மாளம், விருந்து எனத் தொலைக்கிறது.

வந்துவிட்ட நோயைத் தீர்ப்பதற்கும், விருந்தால் ஆக்கிக் கொண்ட புது நோய்க்கு மென மருந்து, மந்திரம், மாத்திரை, குறி, கோடாங்கி எனத் தொலைக்கிறது!

உயிருடன் வாழும்போது பேணிக் காக்காமல் ஏச்சும் பேச்சும் இழிவும் கழிவுமே ஆக்கி நாளும் பொழுதும் மெலிந்தும் நலிந்தும் போகவைத்துச் சாகடித்துவிட்டுச் செத்தபின், எட்டுக்கும் இழவுக்கும் கொட்டுக்கும் முழக்குக்கும் என அழுகிறது!

வெள்ளமானால் என்ன, என்ன, மழையே மழையே இல்லையானால் என்ன, விளைந்தால் என்ன, பயிரே வெந்தால் என்ன, கட்ட வேண்டிய வரியைக் கட்டு என்று கடுத்துநிற்கும் கொடுங்கோல் தண்டவரிக்கும் கொட்டுகிறது!

இரக்கம், உருக்கம், உதவி, ஒருமை என்னும் உணர்வு அறவே இல்லாப் பிறவி பிறந்து தொலைந்துள்ளதே! என்னே! என்னே! கொடுமை என்று பலப்பல நினைவுகள் வாட்ட எழுகின்றது ஒரு பாட்டு! அது :

“மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி இருபிடியூண் வழங்கில் இங்கே

உழவுக்கு முதல்குறையும் என வளர்த்தங் கவற்றையெலாம் ஓகோ பேயின்

விழவுக்கும் புலாலுண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும்

மெலிந்து மாண்டார்