உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் -34

மெல்லென ஓதுதல் நிகழ்கிறதா?

ஏறாத மேட்டில் ஏறி வள்ளலார் பெற்ற பேற்றால் உருவாகிய நிலையங்கள் நிறுவனங்கள் எத்தகையர் கைப்பட்டு எந்நிலை யுற்றுக் கிடக்கின்றன?

பளிங்குக் கல்லும் பளிச்சீடும் சன்மார்க்க விளக்கமாகி விடுமா? வள்ளலார் வழிநெறியை ஒழித்துவிட்ட வழிபாட்டு நெறி சன்மார்க்க விளக்கமாகிவிடுமா?

புறத்தே வெளுத்து அகத்தே கறுத்தார் ஆயிரம் செய்தாலும் ஒருமையுளார் செய்யும் ஒரு செயலுக்கு ஒப்பாகாது காண்!

வள்ளற் பெருமானாரை உள்ளி உள்ளி உருகி உருகி ஓடித்தேடி வருவார், உள்ளே வந்தபின் அடையும் நிலை என்ன?

ஏந்திநிற்கும் கையை அன்றி என்ன காண்கின்றனர்? அக்காட்சி நாட்டுக்கு ஆகவே ஆகாது என்பதற்காக நிறுவப்பட்ட இடத்தில், அவையே விளக்கமானால்

நிலையம் கண்டு திரும்புவார் நிலையில் எதுபதிவாகிக் கிடக்கும்?

பூச்சாலும் பேச்சாலும் புண்ணை நீக்கிப் பொலிவாக்கி விட முடியாது! அங்கே மட்டுமன்றி எங்கெங்குள்ள சன்மார்க்க நிலையங்களிலும் வள்ளலார் கொள்கை மட்டுமே கோலோச்ச வேண்டும்! கொலுவிருக்கையாக்கிக் கூடிக் கலைதல் கொள்கைப் பேறு ஆகிவிடாது!

சாதி சமயம் சடங்கு அற்ற அருள்விளக்கப் பொதுநிலைக் கழகமாக வள்ளலார் பெயரிய நிலையங்கள் திகழுமாக! அத்தகைய நிலையங்களே ஆன்மநேய ஒப்புரவு நிலையங்களாய் உலகை உய்விக்கும் நிலையங்கள்.