உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களால்

வள்ளலார் கண்ட சாகாக்கலை

237

அப்படியிருத்தல் மேல்விளைவை உண்டுபண்ணாதிருக்கும். அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தை சண்டை விளையத்தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர் களோடு மறுபடி அத்துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.

அப்படி மருவாதவர்களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது. அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தை யாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண் டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும். அப்படித் தெரிவிக்கா தவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம்விட்டுப் போய்விடத் தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது. சி.இராமலிங்கம்.

-

சன்மார்க்க சங்கத்தில் வாழ்வார் பழக்கவிதியாகிய இதில் குறிப்பிடும் செய்திகள், சாலை விளம்பரம், சபை விளம்பரம், அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை, சாலை சம்பந்தி களுக்கு இட்ட சமாதிக் கட்டளை முதலியவற்றில், இடம் பெறாதவை, சங்கம் அமைத்து அங்குள்ளார் நிலைகண்டு, 'அறிவுறுத்தியது இதுஎன அறிதல்' வேண்டும். மேலும்,

"அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு,

இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்பு உண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்கள் எல்லாம் சன்மார்க்கத் திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் பட வேண்டும்" என்று (9.3.1872) எழுதிய எழுத்து முன்னதன் விளக்கமாகும்.

சன்மார்க்க நெறி எவ்வளவு மேம்பட்ட நெறி என்பதும், அதனைக் கொள்வார் எத்தகு பக்குவியாக இருத்தல் வேண்டும் என்பதும், அவ்வாறு பக்குவியாக அமையாதார் அந்நெறியைப் பற்றுவார் போல் காட்டிப் புகுந்தால் என்ன ஆகும் என்பதும் இற்றை வடலூர் சாலை சபை முலியவற்றைக் காண்பார்அறியக் கூடும்.

சபைக்குள் புகுவார் வயது கருதப்படுகிறதா? புகும்நிலை கருதப்படுகிறதா?