உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

சித்திவளாக வழிபாட்டு விதி

சுவாமிகள் ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து,

"இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீபமுன்னிலையில் விளங்குகிறபடியால் உங்களுடைய காலத்தை வீணில் கழிக்காமல் 'நினைந்து நினைந்து' என்னும் தொடக்கமுடைய பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நானிப் போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்”

என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். 'நினைந்து நினைந்து' என்னும் பாடல் “நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே யென்னுரிமை நாயகனே என்று

வனைந்து வனைந் தேத்துதுநாம் வம்மினுல கியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல் கின்றேன் பொற்சபையில் சற்சபையில் புகுந்தருணம் இதுவே"

சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி

ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தில் உள்ளார் யாவரும் சன்மார்க்கப் பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படு கின்றவர் என்றும், அது காலையில் நாமும் ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்.

அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப்பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும்.