உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

எவ்வுயிரும் பெறுதல் வேண்டும்.

""

"இவற்றை எண்ணுக! எண்ணுக! எண்ணம் வாழ்வாகச் சிறக்க! சன்மார்க்கமாம் நன்மார்க்கம் உலகை உய்விப்பதாக!”

சபை வழிபாட்டு விதி

235

ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்குவைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம்.

தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில், தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி, கரண சுத்தி யுடையவர்களாய் திருவாயிற் படிப் புறத்தில் இருந்துகொண்டு விளக்கேற்றி, பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது எழுபத் திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது, உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும். நாலு நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும்.

தூசு துடைக்கப் புகும்போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக் கொண்டு புகுந்து முட்டிக்கால் டுக் கொண்டு தூசு துடைக்கச் செய்ய வேண்டும்.

விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவரும் எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் பொருள் இடம் போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய் தெய்வ நினைவுள்ளவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல்

வேண்டும்.

விளக்கு வைக்கும் போதும் தூசுதுடைக்கும் போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது.

ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட விருக்கப்படாது. அத்திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற் சபைக்குள் வைத்து, அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தானக் காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.