உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

37

'அழிபசி' விளக்கம் கடுகைத் துளைத்துக் கடலைப் புகட்டும் குறளாக்குகிறதா? அணுவைத்

கடலைப் புகட்டும் குறளாக்குகிறதா?

உடற்றும்பசி

துளைத்துக்

"பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிக்கின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம் என்று வள்ளலார் வரைவதில் வள்ளுவர் கூறும்,

'பசியென்னும் தீப்பிணி" பற்றுகிறதன்றோ! (227)

'நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப்பங்கு கொன்று தின்ற பசி என்கிற பாபி இன்றும் வருமே! இதற்கு என்ன செய்வோம்!' என்று ஏக்கங் கொள்கின்ற ஏழைச் சீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் சீவகாருணியம்.

'வெயிலேறிப் போகின்றதே, இனிப் பசியென்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதிவசத்திற்கு என்ன செய்வது!' என்று தேனில் விழுந்த ஈயைப்போல திகைக்கின்ற ஏழைச் சீவர்களுடைய திகைப்பை நீக்குவதுதான் சீவகாருணியம்.

'இருட்டிப் போகின்றதே' இனி ஆகாரங் குறித்து எங்கே போவோம், யாரைக் கேட்போம்! என்ன செய்வோம்!' என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச் சீவர்களது விசாரத்தை மாற்றுவதே சீவகாருணியம்.

66

இவை,

"இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு" (1048)

என்பதன் வழியாகத் தோன்றிய விரிவாக்கச் செய்தி.

"பகற்போதும் போய்விட்டது, பசியும் வருத்துகின்றது. வேறிடங்களில் போக வெட்கந் தடுக்கின்றது. வாய் திறந்து கேட்க மனம் வலிக்கின்றது. வயிறு எரிகின்றது. உயிரை விடுவதற்கு உபாயம் தெரியவில்லை; இவ்வுடம்பை ஏன் எடுத்தோம் என்று மனமும் முகமும் சோர்ந்து சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனங் கண்ட ஊமையைப் போல் மனம் மறுகுகின்ற மானிகளாகிய சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து மானத்தைக் காப்பதுவே சீவகாருணியம்.