உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

இவ்வுலக போகங்களோடு இந்திரபோகம் முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவை அறிந்து அநுபவம் விளங்கிய ஞானிகளும் இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்செய்து உண்மை நிட்டையில் இருக்கின்ற யோகிகளும் இறந்தோரையும் எழுப்பத் தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும் முனிவர்களும் தவசிகளும் பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அநுபவ லட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு வருகின்றார்கள்; பலி நேராத போது நிலை கலங்குகின்றார்கள்."

இவை ஞான, யோக, தவ,சித்து அழிவுகள்.

"சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அது குறித்து உயிர் விடத் தக்க ஞானிகளும் பசி நேரிட்டபோது சொல்லத் தகாத வரிடத்தும் சொல்லி மானங்குலைகின்றார்கள்.

சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர் களும் பசிவந்த போது ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள்.”

"கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை அறிந்து செய்தற்கரிய செய்கைகளை செய்து முடிக்க வல்லவர் களும் பசி நேரிட்டபோது அறிவும் கருத்தும் அழிந்து தடுமாறு கின்றார்கள்."

வை மானம், ஒழுக்கம், கல்வி ஆகியவை அழிவு!

"இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்ட போது புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள்.”

நாமே பெரியவர் நமக்குமேற் பெரியரில்லை என்று இறுமாப் படைகின்ற அகங்காரிகளும் பசி நேரிட்ட போது அகங்காரம் குலைந்து ஆகாரங் கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கிறார்கள்.."

"ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள்."

அழிவு!

இவை போக அழிவு, செருக்கு அழிவு, ஊதாரித்தன