உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிபசி

வள்ளுவர் வழியில் வள்ளலார்

35

பசியை வாளா கூறாமல் 'அழிபசி என அதன் கொடுமை விளங்கும் வகையில் குறிக்கிறார் வள்ளுவர். எவருக்கும் உரிய அழிபசி என்பதைக் கூறுவார்போல 'அற்றார் அழிபசி' (226) என்றுரைத்தார். அழிபசியில் உள்ள 'அழி' என்பது எவ்வெவ் அழிவுகளையெல்லாம் உள்ளடக்கியது? திருக்குறளுக்கு இது காறும் உரைகண்ட எவரும் ஒடுங்கிப் போகுமாறு விளக்குகிறார்

வள்ளலார்.

"பசியினால் துன்பம் நேரிட்டபோது மனவெழுச்சியால் சகித்துக் கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிர் இழந்து விடுவார்கள்.

""

உயிரிழப்பு உச்சமான அழிவு அன்றோ! பிற அழிவுகள்?

"பசி நேரிட்டபோது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும் அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்கள் என்றால் அன்னியமாகிய வீடு மாடு நிலம் உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்கள் என்பது சொல்ல வேண்டியதில்லை.'

66

இவை உரிமை அழிவும், உடைமை அழிவும்!

'உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசி நேரிட்டபோது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் 'பசி நேரிட்டது என்ன செய்வது?' என்று அருகில் இருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்கிறான்."

-இது பதவிப் பெருமிதம் அழிவு!

"பகைவரால் எறியப்பட்டு மார்பில் உருவிய பாணத்தையும் கையால் பிடித்துக் கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும் பசி நேரிட்டபோது சௌரியத்தை இழந்து பசிக் கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து 'இளைப்பு வருமே' 'சண்டை எப்படிச் செய்வது!' என்று முறையிடுகின்றார்கள்."

இது பேராண்மை யழிவு!