உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

தயவுடையவர்கள் ஆகார்கள். பசியால் வரும் கொலையை ஆகாரத்தால் அன்றி வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப் படாது. பகை முதலியவற்றால் வருங் கொலையை அநேக உபாயத்தால் நிவர்த்தி செய்விக்கக் கூடும் ஆதலால் கொலையால் வரும் துன்பத்தைப் பசியால் வரும் துன்பத்தில் அமைத்து அடிக்கடி வலியுறுத்துகின்ற தென்றறியவேண்டும்."

"அன்றியும் தாகத்தால் வருந்துகின்றவரும், பிணியால் வருந்துகின்றவரும், இச்சையால் வருந்துகின்றவரும், எளிமையால் வருந்துகின்றவரும், பயத்தால் வருந்துகின்றவரும, பசிவருத்த முண்டாகும்போது அவ்வவ் வருத்தங் களையெல்லாம் மறந்து பசிவருத்தம் மேற்பட்டு ஆகாரங் கொடுக்க முயற்சி செய்கின்றார் கள். அன்றி, அரசன் ஆக்கினையால் கொலைக்குற்றம் பற்றிக் கொலை செய்ய விதிக்கப்பட்ட குற்றவாளியும் பசி வந்தபோது தன் பயத்தையும் துன்பத்தையும் மறந்து அந்தப் பசியை மாற்றிக் கொள்ளுகிறான். வயித்தியரால் தாம் இறந்து விடுவது நிச்சய மென்று தெரிந்து கொண்ட வியாதியாளரும் மூப்பாளரும் பசி வந்தபோது தமது துன்பத்தை மறந்து பசி நீக்க முயலுகின்றார்கள். பசிக்குத் தயவினால் ஆகாரங்கொடுக்கத் துணிந்தவன் வேறு வகையால் சீவர்கள் இம்சை பட்டழிவதற்குச் சம்மதிக்கவே மாட்டான். ஆகலினும் பசியால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்விக்கிற தருமத்தை அடிக்கடி வலியுறுத்துவதென்றறிய வேண்டும்."

இன்னும் விரிவாக வரைகிறார் வள்ளலார். இப்பேரருட் பேருரை,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'

55

என்னும் ஒப்புயர்விலா ஒரு மணிக் குறளுக்கு வாய்த்த ஒளி விளக்கமென நடையிடுதல் கண்கூடு.

இனிச் சிலச்சில குறிப்புகளை அப்படி அப்படியே தெறித்து விட்டுச் செல்லும் வள்ளலார் உரை வீச்சில் எத்தனை எத்தனையோ குறள் மணிகள் மின்னுகின்றன.

பிறர் தாராத விளக்கங்களையெல்லாம் தன்வைப்பாக்கிக்

கொண்டு எத்தனையோ குறள்கள் பளிச்சிடுகின்றன.