உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

33

"பசித்தவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்குவிக்கின்ற தயவுடையவர்களுக்கு இச்சையால் வரும் துன்பங்கள் நீக்குவிப் பதற்குத் தயவு வராமல் இராது. சீவர்களுக்கு உள்ளபடி பசி நேரிடுமாகில் ஆகாரத்தில் அல்லது மற்றொன்றிலும் இச்சையே ராது. ஆகாரங் கிடைக்கில் உண்டு பசி தீர்ந்தவர் தம் ச்சையைச் சிறிய முயற்சிகளால் முடித்துக் கொள்ளவும் கூடும். இச்சையோடு பல நாள் தேகத்தை வைத்திருக்கலாம். பசியோடு ஒரு நாளும் வைத்திருக்க முடியாது.

'பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுள்ளவர்களுக்குச் சுதந்திரமற்ற சீவர்களது எளிமையை நீக்கத் தயவு வராமல் இராது. பசியினால் வருந்து கின்ற எளிமைக்கு மேற்பட்ட எளிமையே இல்லை. எளிமையைச் சில நாள் சென்று மாற்றிக் கொள்ளக் கூடும். பசியை அவ்வாறு மாற்றிக் கொள்ளக் கூடாது. எளிமையோடு தேகத்தை வைத்திருக்கக்கூடும். பசியோடு வைத்திருக்க முடியாது.

J

ராது.

"பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவருக்குப் பயத்தை நிவர்த்தி செய்விப்பதில் தயவு வராமல் பசியினால் வரும் பயத்திற்கும் கொலையினால் வரும் பயத்திற்கும் மேற்பட்ட பயமே இல்லை. பயத்தை உபாயத்தால் நீக்கிக் கொள்ளக் கூடும். பசியை உபாயத்தால் நீக்கிக் கொள்ளக் கூடாது. பயத்தோடு தேகத்தை வைத்திருக்கலாம். பசியோடு வைத்திருக்கப்படாது.

"பசியினால் வரும் அவத்தைகளும் துன்பங்களும் கொலை யினால் வரும் அவத்தைகளும் துன்பங்களும் தம்முள் ஒத்திருக் கின்றன. ஆதலால், பசியினால் வருந் துன்பத்தையும் கொலை யினால் வருந் துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருண்யத்திற்கு முக்கிய லட்சிய மென்றறிய வேண்டும்.

"பசியினால் வருந் துன்பத்தை நீக்குதலும் கொலையினால் வரும் துன்பத்தை நீக்குதலும் சீவகாருணியத்திற்கு முக்கிய லட்சியமாக இருக்கவும், இவ்விடத்திலும் பசி நீக்குதலை மாத்திரம் அடிக்கடி வலியுறுத்துவது என்னெனில், ஒரு சீவன் பசியினால் கொல்லப்படும் என்பதை அறிந்து காருணியத்தால் பசியை நீக்கி உயிர் பிழைப்பிக்கும்படி செய்பவர் வேறு வகையால் உயிர்க் கொலை நேரிட்டால் அதற்கிரங்கி அந்தக் கொலையால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்யாமல் இரார்கள். கொலையால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்வியாதவர்கள் பசியால் வருந் துன்பத்தையும் நிவர்த்தி செய்விக்கத் தக்க