உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

39

இவ்விளக்கங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு நிற்கிறதே வள்ளுவர் வளச் சொல்லாகிய "உடற்றும் பசி" என்பது.

66

"விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணிற் றுடற்றும் பசி”

என்பதற்கு எவரே இவ்விளக்கங்களைத் தர இயலும்! வள்ளுவர் வாய்மொழி வளம், வள்ளலார் உருகும் உள்ளச் சுரப்பால் அள்ளக்குறையா அளவில் பெருக்கெடுக்கின்றதாம்!

பசியினால் ஏற்படும் அழிபாடுகள், பசி நீங்குதலால் உண்டாகும் ஒளி நிலைகள் எல்லாம் மிக விரிவுடையன ஆகலின் இவ்வளவில் அமைவாம். சீவகாருணிய ஒழுக்கம், சன்மார்க்க விண்ணப்பங்கள் ஆகியவை காண்க.

தாழும் தாழ்க்கோலும்

அன்பினை அடைத்து வைக்கும் 'தாழ் இல்லை' என்பது திருக்குறள்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்"

என்பது அது.

அன்பு ஈன்ற அருட்குழவியை எப்படிச் சொல்லலாம்? தாழ்க்கோலாகச் சொல்லலாம் என்பது வள்ளலார் தேர்ச்சி! வள்ளுவர் தோள்மேல் அமர்ந்து பார்க்கும் பேறு வாய்த்தவர் அல்லரோ வள்ளலார்?

"சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவு கோல்' என்கிறார் வள்ளலார். அத்திறவுகோலைப் பெறாமல் பிற வழியால் மோட்சவீடு உற்றாரும், ஆங்குப் புகக் கூடாராய் அத்திறவுகோல் பெறுதற்காக மீளவும் பிறப்பராம்:

விரதிகளும் பத்தர்களும் இருடிகளும் யோகிகளும் சித்தர் களும் ஞானிகளும், "சீவகாருணியம் என்கிற திறவு கோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்சம் என்கிற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவு கோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்கள் என்று உண்மையாக அறிய வேண்டும்.