உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் -34 ஓ

இதனால் அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடென்றும் அறியப்படும்." என்கிறார்.

அருள் விளக்கமாம் இப்பகுதியில் கொல்லாமை புலா லுண்ணாமை என்னும் வள்ளலார் உயிர்க் கொள்கைகளும் ஆராயப்படுகின்றன. அவ்விரண்டு அதிகாரப் பொருள்களையும் தமிழுலகில் வன்மையாய் முதற்கண் உரைத்த உரவோர் வள்ளுவர் என்பதும், அதனைச் சிக்கெனப்பற்றிச் செழிக்க வளர்த்தவர் வள்ளலார் என்பதும் எவரும் அறிந்த செய்தி. ஈகை இன்பம்

"ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கண் அவர்.”

என ஈயாரை இடித்துரைப்பார் வள்ளுவர். ஈத்துவக்கும் ன்பத்தை வள்ளலார் அருமையாக விளக்குகிறார்: அதனை அபர இன்பம், பர இன்பம் என இரண்டாக்கி ஆய்கிறார்.

"உடுப்பதற்கு வஸ்திரம் இருப்பதற்கு இடம் உழுவதற்கு நிலம் பொருந்துவதற்குப் பெண் விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலானவை கொடுத்தபோது பெற்றுக் கொண்டவர் களுக்கு உள்ளிருந்து முகத்தினிடமாகத் தோன்றுகின்ற இன்ப விளக்கமும், அந்த இன்பத்தைக் கண்டு கொடுத்தவர் களுக்கு உண்டாகின்ற இன்ப விளக்கமும் கடவுள் கரணத்தில் ஏக தேசமும் சீவகரணத்திற் பூரணமுமாகத் தோன்றுகின்றவை. ஆகலால் அது அபர இன்பமென்றறிய வேண்டும்.

"உண்பதற்கு ஆகாரமில்லாமல் சோர்வடைந்த சீவர் களுக்குச் சீவகாருணியத்தால் ஆகாரங் கொடுக்க உண்டு பசி நீங்கிய தருணத்தில் அந்தச் சீவர்களுக்கு அகத்தி னிடத்தும் முகத்தினிடத்தும் தழைந்து பொங்கித் ததும்புகின்ற இன்பமும் அது கண்டபோது கொடுத்தவர்களுக்கு அகத்திலும் முகத்திலும் அவ்வாறுண்டாகின்ற இன்பமும் ஆன்ம சகிதமாகிய கடவுள் கரணத்திற் பூரணமாகத் தோன்று கின்றவையாகலால் பரவின்பமென்றது என்றறிய வேண்டும்."

இவை உரைநடை நூல்களால் அறியவரும் திருக்குறள் கருத்துக்கள். இனி, பொன்வண்ணத் தந்தாதி உரை முதலாக வள்ளலார் வரைந்த வியாக்கியான (விளக்க) வுரைப் பகுதிகளில் சில குறட்பாக்கள் இடம் பெற்றுள. அவற்றைக் குறிப்போம். ஓர்தல் விளக்கம்